போயும் போயும்.. "அதுகிட்ட" இளைஞர் செய்த காரியம்.. நடுரோட்டிலேயே கடுப்பான எருமை மாடு.. என்னவாம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் வீடியோ ஒன்று ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்துதான் நெட்டிசன்கள் ரசித்தும், கிண்டலடித்தும் வருகிறார்கள்.

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றால், அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Heartbreaking snake video and Man makes skating before Bufalloes

சில நேரத்தில், அரிய சம்பவங்கள் அல்லது நகைச்சுவை தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

பாம்புகள்: அதிலும், பாம்பு வீடியோ என்றாலே, காண்போர்களுக்கு அள்ளு கிளம்பிவிடும்.. இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண், 40, 50 கருநாகங்களை, பாத்ரூமில் வைத்து, தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து கொண்டிருந்தார்.. அந்த ராஜநாகங்களும் பெண்ணுக்கு கட்டுப்பட்டு, அவர்முன்பு வளைந்து மண்டியிட்டு பாத்ரூமிலேயே விழுந்து கிடந்தன. இதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

அதேபோல, சமீபத்தில் பெண் ஒருவர், தன் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீனி போடுவதற்காக சென்றார். அந்த 2 எருமை மாடுகளின் முன்பு தீனி வைத்துவிட்டு, அதன் மூக்கணாங்கயிறையும் பிடித்து இழுத்து கட்டிவிட்டார். அத்துடன், நிற்காமல், திடீரென அந்த எருமை மாடு முன்பு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார்.. அதுவும் பாம்பு டான்ஸ்..

ஸ்கேட்டிங்: எருமை மாட்டுக்கே அந்த டான்ஸ் பொறுக்கவில்லை போலும்.. கடுப்பாகி, அந்த பெண்ணை படுகோபத்தில் முட்டிவிட்டது.. மாடு முட்டியதில், அந்த பெண் தூக்கி வீசப்பட்டு, அருகில் கிடக்கும் தண்ணீர் தொட்டிக்குள் தொப்பென்று விழுந்துவிட்டார்.. இந்த பாம்பு டான்ஸ் வீடியோவை நெட்டிசன்கள் பலநாட்களுக்கு ஷேர் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. ஏதோ காட்டுப்பகுதி போல தெரிகிறது.. இங்கு ஸ்கேட்டிங் செய்தால், எந்த தொந்தரவும் இருக்காது என்று நினைத்து, ஒரு இளைஞர், சாலையில் ஸ்கேட்டிங் செய்தபடியே வருகிறார்..

ஸ்டைலிஷ்ஷாக ரோட்டில் ஸ்கேட்டிங் செய்துவரும்போதே, எதிரே எருமை மாடுகளின் கூட்டம் ஒன்று வருகிறது. 5, 6, எருமை மாடுகள் சாலையை முழுக்க ஆக்கிரமித்து மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தன.

Heartbreaking snake video and Man makes skating before Bufalloes

மாடு முட்டியது: ஆனாலும் இந்த இளைஞர் தன்னுடைய ஸ்கேட்டிங்கை நிறுத்தவில்லை.. எருமை மாடுகளுக்குள் நுழைந்து சென்றுவிடலாம் என்று நினைத்து, வேகமாக முன்னோக்கி வருகிறார்.. இதைப்பார்த்து ஒரு எருமை மாடு, கடுப்பாகி, இளைஞரின் வயிற்று பகுதியிலேயே முட்டிவிட்டது. இதனால், இளைஞர் நிலைதடுமாறி தொப்பென்று, அந்த எருமை மாட்டின் மீதே விழுந்து, சாலையில் உருண்டுவிட்டார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

"இதெல்லாம் தேவையா பாஸ்.. எருமை மாட்டுக்கே உங்க ஸ்கேட்டிங் பிடிக்கலையே.. போயும் போயும் அதுகிட்ட பல்ப் வாங்கிட்டீங்களே?" என்று கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+