ஹய்யய்யோ.. வெட்டவெளியில், நபரை கட்டிப்பிடித்து கொண்ட "லூசி" பெண்.. வீடியோ வேற.. அதிர்ந்த மக்கள்
மலைப்பாம்பு ஒரு நபரின் உடம்பெல்லாம் இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்டுவிட்டது
சென்னை: ஒரு நபரை மலைப்பாம்பு ஒன்று இறுக்கமாக சுற்றிக்கொண்டுவிட்டது.. அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா? இந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.
இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

ராஜநாகம்
இதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிலியை தந்துவிடுவதுதான்.. இப்படித்தான் கர்நாடக மாநிலம் பொம்மனகட்டே என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதி, குடியிருப்புக்குள் ஒரு நாகப்பாம்பு புகுந்துவிட்டது. உடனே அதை பிடிக்க வீரரை அழைத்துள்ளனர்.. பாம்புபிடி வீரரோ, நாகப்பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டார்.. ஆனால், அத்துடன் விடவில்லை.. அந்த நாகப்பாம்பின் பின்னால் இருந்து முத்தம் தந்துவிட்டார்..

மடி மீது மலைப்பாம்பு
அந்த பாம்பு என்ன கோவத்தில் இருந்தோ, டக்கென ஆக்ரோஷமாக திரும்பி வீரரின் உதட்டில் வேகமாக தீண்டிவிட்டது.. உதட்டில் இருந்து அந்த இளைஞருக்கு ரத்தம் கொட்டியது.. இதனால் பதற்றம் அடைந்து, பாம்பை விட்டுவிடுகிறார். இதற்கு பிறகு, அந்த இளைஞருக்கு சிகிச்சை தரப்பட்டு உயிரை காப்பாற்றி விட்டார்கள்.. அதேபோல, இன்னொரு வீடியோவில் ஒருவர் தரையில் உட்கார்ந்துள்ளார்.. அவரது மடியில் ஜம்மென்று படுத்துக் கொண்டு, விளையாடி கொண்டிருக்கிறது ஒரு மலைப்பாம்பு.. இவரோ, அந்த பாம்பின் தலையை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு, அதை கொஞ்சியபடியே, அந்த பாம்பை பற்றி புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கிறார்? மடிமீது மலைப்பாம்பா? என்று இணையவாசிகள் இதை பார்த்து மிரண்டுவிட்டார்கள்.

நார்மல் சைஸ்
இப்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, ஒரு நபரை மொத்தமாக அழுத்தி கட்டிப்பிடித்து கொண்டது.. அந்த பாம்பு பெயர் லூசி.. மஞ்சள் கலர் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு வகையை சார்ந்தது.. இந்த ரெட்டிகுலேட்டட் வகை மலைப்பாம்புகள்தான், உலகிலேயே நீளமான பாம்புகள் என்று சொல்லப்படுகிறது.. 20 அடிக்கும் மேல், நீளமாக வளக்கூடியதாம்.. சாதாரண சைஸ் பாம்பை பார்த்தாலே பயப்படுபவர்கள், இந்த பாம்பை தூரத்தில் பார்க்கும்போதே அலறி ஓடுவார்களாம்.. அப்படிப்பட்ட பாம்பு, ஒரு மனிதனின் முழு உடலையும் சுற்றிகொண்டுவிட்டது..

விஷமற்ற பாம்பு
கூண்டுக்குள் எடுத்து போடும்போது, அந்த பாம்பு அவரை பலமாக அழுத்துகிறது.. வலி தாங்காமல் அந்த நபர் கத்துகிறார்.. இவ்வளவும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. பொதுவாக, மலைப்பாம்புகள் விஷமற்ற பாம்புகள் என்றாலும், மனிதனையே விழுங்கக்கூடியது என்பார்கள்.. அல்லது இறுக்கி பிடித்து மனிதரை அழுத்தி கொண்டால், மூச்சு திணறி உயிரே போய்விடும்.. அந்தவகையில் ஆபத்தானதாக கருதப்படும் மலைப்பாம்புடன், இந்த நபர் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து இணையவாசிகள் அதிர்ந்து போய் உள்ளனர்.. என்ன இருந்தாலும் மலைப்பாம்புக்குன்னு ஒரு மரியாதை வேணாமா? இப்படியா கட்டிப்பிடித்து கொள்வது? என்று பீதி விலகாமல் கேட்டு வருகிறார்கள்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications