மடியில் படுத்திருப்பது யார் பாருங்க.. அப்பட்டமா தெரிந்த காட்சி.. வீடியோவை பார்த்து அதிர்ந்த மக்கள்

மடிமீது படுத்திருக்கும் மலைப்பாம்பை கண்டுஅதிர்ந்து போயுள்ளனர் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் வெளியாகி உள்ள 2 வீடியோக்களை பார்த்து இணையவாசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்..!!!

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

 ராஜநாகம்

ராஜநாகம்

இதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிலியை தந்துவிடுவதுதான்.. இப்படித்தான், சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு போய்விட்டது.. பாம்பு காதுக்குள் நுழைந்ததுமே, டாக்டரிடம் சென்றுள்ளார்.. டாக்டரும், ஒரு சிறிய கொரடு கொண்டு வந்து, அந்த பாம்பை மெல்ல வெளியே எடுத்தார்.. வீடியோவில் இது அப்பட்டமாக பதிவாகியிருந்தது..

பாத்ரூம்

பாத்ரூம்

காதுக்குள் பாம்பு போகும் வரை அந்த பெண்ணுக்கு அது எப்படி தெரியாமல் போனது? என்ற கேள்வியை இணையவாசிகள் துளைத்தெடுத்தனர். கடந்த வாரம்கூட, ஒரு பெண், 40, 50 கருநாகங்களை, பாத்ரூமில் வைத்து, தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து கொண்டிருந்தார்.. அந்த ராஜநாகங்களும் பெண்ணுக்கு கட்டுப்பட்டு, அவர்முன்பு வளைந்து மண்டியிட்டு பாத்ரூமிலேயே விழுந்து கிடப்பதை வீடியோவில் பார்த்து பலர் பதறிவிட்டனர்.. இப்போதும் 2 பாம்பு வீடியோக்கள் அதிர்ச்சியில் நெட்டிசன்களை உறைய வைத்துள்ளது..

ராஜநாகம்

ராஜநாகம்

பாம்பு ஏதாவது உயிரினங்களை, மிருகங்களை விழுங்கும்.. ஆனால், ஒரு பாம்பையே இன்னொரு பாம்பு விழுங்குவதை பார்த்திருக்கீறிர்களா? ஒரு ராட்சச பாம்பு, இன்னொரு முழு நீள பாம்பை விழுங்குகிறது.. ராஜ நாகம் பாம்பையே வேட்டையாடி உணவாக்கி கொள்ளும் வீடியோக்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு... ஸ்னேக் வேல்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மாதம்கூட, ஒரு வீடியோ வெளியானது.. ராஜநாகம் ஒன்று நீளமான பாம்பு ஒன்றை வேட்டையாடி விழுங்கிவிட்டது..

விஷம்

விஷம்

பருமனான அந்த பெரிய பாம்பை வளையை விட்டு வெளியே இழுத்து, அதன் உடலுக்குள் விஷத்தை செலுத்துகிறது ராஜநாகம்.. பிறகு அதன் வாய்க்குள், அந்த பாம்பின் வால் உள்ளே போகும்வரை வீடியோவில் அப்பட்டமாக பதிவாகி இருந்ததை பார்த்து மக்கள் உறைந்துவிட்டனர். அதுபோலவேதான் இந்த ராஜநாகம் பாம்பு வீடியோவும் இணையத்தில் வெளியாகி பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.. அதேபோல, இன்னொரு வீடியோவில் ஒருவர் தரையில் உட்கார்ந்துள்ளார்..

 மடி மீது மலைப்பாம்பு

மடி மீது மலைப்பாம்பு

அவரது மடியில் ஜம்மென்று படுத்துக் கொண்டு, விளையாடி கொண்டிருக்கிறது ஒரு மலைப்பாம்பு.. இவரோ, அந்த பாம்பின் தலையை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு, அதை கொஞ்சியபடியே, அந்த பாம்பை பற்றி பாராட்டியும் புகழ்ந்தும் சொல்லி கொண்டிருக்கிறார்.. மடிமீது மலைப்பாம்பா? என்று இணையவாசிகள் இதை பார்த்து மிரண்டு கிடக்கிறார்கள்.

15 அடி நீளம்

15 அடி நீளம்

15 அடி நீளமுள்ளது இந்த மலைப்பாம்பு.. பார்ப்பதற்கு வழக்கமான மலைப்பாம்பு போல இல்லாமல் கலர் கலராக காணப்படுகிறது.. வீடியோவில் உள்ள அந்த நபர், மலைப்பாம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விரிவாக எடுத்து சொல்லுகிறார்.. நடுநடுவே அந்த பாம்பை பாசமாக கட்டிப்பிடித்து முத்தம் தருகிறார்.. மலைப்பாம்பைவிட, அந்த பாம்பை, அதன் ஓனர் கையாளும் விதத்தைதான் மக்கள் உறைந்து போய் பார்த்து கொண்டிருந்தனர்.. jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவாகி உள்ள நிலையில், 3 கோடியையும் தாண்டி, மக்கள் பார்த்து ரசிப்பதுடன், ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+