"நடுங்கிடுச்சே".. புயலானாலும் புருஷன்.. இவ்ளோ தண்ணி நிக்குதே.. அவரை காணோமே.. தண்ணீரில் தகித்த கண்ணீர்
சென்னை: கை, கால்கள் உடம்பெல்லாம் நடுங்கிப்போக.. பீதி நிறைந்த வார்த்தைகளுடன்.. இருட்டு பகுதியில்.. முழங்கால் நீருக்குள் கலங்கிய கண்களுடன், கணவரை தேடி சென்ற, சென்னை பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த பெண்ணுடன் சேர்ந்தே கலங்கி போகிறார்கள்.
நேற்றைய தினம் சென்னையில் புயல் அடித்தது.. பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயல் கடக்க துவங்கியது.
இதனால் மழையுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது.. தேவையில்லாமல் யாருமே வெளியே போக வேண்டாம் என்று அதிகாரிகளும், அமைச்சர்களும் சென்னைவாசிகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.
இமாச்சல் வெற்றி உற்சாகத்தில் ராகுல் காந்தி.. மீண்டும் தொடங்கியது பாரத் ஜடோ யாத்திரை

புயலும் புருஷனும்
இன்று அதிகாலை 3 மணிக்குதான் புயல் முழுவதுமாக கரையை கடந்தது... நேற்றிரவு சென்னையில் பலத்த காற்றுடன் மழை பொழிந்ததால் பல இடங்களில் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.. பல இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது... சென்னை உத்தண்டி குப்பத்தில் கடல் நீர் உட்புகுந்துவிட்டது.. அதனால், முழங்கால் அளவுக்கு சாலைகளில் அங்கு நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது... இந்த பகுதியில் பெரும்பாலும் மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

மீனவ குப்பம்
இரவுநேரத்தில், கொட்டும் மழையில், தேங்கி நிற்கும் அந்த பகுதிகளில் மக்கள் யாருமே வரவில்லை.. ஆனால் அந்த நேரத்தில், நடுத்தர வயது பெண் ஒருவர், அழுதுகொண்டே வந்தார்.. அங்கிருந்த செய்தியாளர்கள் அந்த பெண்ணிடம் என்ன ஏதென்று விசாரித்தார்கள்.. "என் புருஷனை காணோம்.. கூலி வேலைக்கு போயிட்டு இப்பதான வரேன்.. என் புருஷனும் காலேஜில் கூலி வேலை பார்க்கிறார்.. இன்னைக்கு வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு சாயங்காலம் வந்திருக்கார்.. ஆனால், வீட்டுக்குள்ளேயே தண்ணீர் புகுந்திடுச்சு.. அவரை வீட்டில் காணோம்" என்று பயத்தில் நடுங்கிக் கொண்டும், அழுது கொண்டும் சொன்னார்..

இருட்டில் தவிப்பு
அதற்கு செய்தியாளர்கள், "பயப்படாதீங்க.. ஒன்னும் இல்ல.. நீங்க போங்கம்மா.. போலீஸ் கண்டுபிடிச்சு தந்துருவாங்க என்று ஆறுதல் சொன்னார்கள். ஆனாலும் அந்த பெண், போலீசுக்கு போகவில்லை.. முழங்கால் அளவு தண்ணீரில், இருட்டுக்குள் அழுதபடியே கணவரை தேடி கொண்டிருந்தார்.. இந்த பகுதி முழுக்க மீனவ குப்பம் என்பதாலும், கடல் சீற்றம் அதிகமாகி கொண்டே இருந்ததாலும், இந்த பகுதி அபாயகரமான பகுதி யாரும் வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அதனால், மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு முன்னதாகவே அழைத்து செல்லப்பட்டுவிட்டதால், இங்கு மக்கள் நடமாட்டமே இல்லை..

புருஷன் குப்பம்
ஆபத்தான பகுதி என்று சொல்லியும், இந்த பெண் தன்னுடைய கணவரை காணவில்லை என்று பதற்றத்துடனும், பயத்துடன், கண்ணீர் விட்டு அலைந்து திரிந்து தேடிப்போனார்.. அவர் கையில் குடைகூட இல்லை.. ஒரே ஒரு பிளாஸ்டிக் கவரை தலைக்கு பிடித்திருந்தார்.. ஆனால், சூறாவளி காற்றில் அந்த கவரும் பறந்து கொண்டே இருந்தது.. பின்னர், அவரை அங்கேயே நிற்கும்படியும், போலீசாருக்கு தகவல் சொல்வதாகவும் செய்தியாளர்கள் அறிவுறுத்தியும், பதற்றத்தில் இருந்த அந்த பெண் எதையும் கேட்கவில்லை. இருள் பகுதியில் கணவரை தேடினார்.

கண்ணீர் தண்ணீர்
அதற்கு பிறகு, செய்தியாளர்கள் உடனடியாக இது தொடர்பாக மீட்பு படையினருக்கும் தகவல் சொன்னார்கள்.. மீட்பு படையினரும், அங்கிருந்த போலீசாருடன் ஜீப்பில் வந்து சேர்ந்தனர்.. அந்த பகுதி முழுவதும் அவர்களும் சேர்ந்து தேடியலைந்தனர்.. இறுதியில், காணாமல் போன கணவனை மீட்டு முகாமிற்கு அழைத்துச் சென்று பத்திரமாக சேர்த்தனர். பிறகு, குப்பத்துக்குள் சென்ற போலீசார் அந்த பெண்ணிடமும் தகவலை சொல்லி, அவரையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு வந்து, முகாமில் பத்திரமாக சேர்த்துள்ளனர்.. ஆனால் கணவனை காணோம் என்று பரிதவித்து போன அந்த பெண்ணின் கண்ணீர், கொட்டும் மழையிலும் தகித்து போனது..!!