Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெப்பம் + தண்ணீர் + ஆக்சிஜன்.. சந்திரயான் 3ன் மேஜர் கண்டுபிடிப்பு.. இனி மனித குல வரலாறே மாறப்போகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவில் சந்திரயான் 3 பல்வேறு கண்டுபிடிப்புகளை அடுத்தடுத்து நிகழ்த்தி அசத்தி வருகிறது. சந்திரயான் 3 செய்யும் சில ஆராய்ச்சி முடிவுகள் மனித குலத்தின் எதிர்காலத்தையே மாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

சந்திராயனின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் ஆய்வு செய்து வருகிறது. இவை அங்கே பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றது. அவை என்னென்ன கண்டுபிடிப்புகள் என்று பார்க்கலாம்.

Heat, water, oxygen: How will Chandrayaan 3s major discovery change the Human future from now on?

வெப்பநிலை: இதில் பிரக்யான் ரோவர் உதவியுடன் சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி நிலவில் இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.

நிலவின் மேல் பகுதியில் சில இடங்களில் 70 டிகிரி செல்ஸியஸ் கூட நெருங்கி உள்ளது. அதாவது நிலவின் தரைப்பகுதியில் தென் மண்டலத்தில் கூட வெப்பம் அதிகமாக உள்ளது.

நீர்: நிலவில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே சந்திரயான் 1 கண்டுபிடித்தது. தற்போது தென் பகுதியில் உள்ள வெப்ப நிலை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உள்ளே தண்ணீர் ஐஸ் ஆக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் உள்ளே இருக்கும் ஐஸ் வெளியே வந்தால் வெப்பநிலை காரணமாக ஐஸ் உருகி தண்ணீர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இது நிலவில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய , அங்கே ஆறுகளை உருவாக்க வழி வகுக்கும். இது மனித குலத்தின் மாற்றத்திற்கு காரணமாக அமையும்.

சல்பர் - ஆக்சிஜன்: அதேபோல் பிரக்யான் ரோவரின் லேசர் மூலம் இயங்கும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப், நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மேற்பரப்பில் கந்தகம் அதாவது சல்பர் இருப்பதை கண்டுபிடித்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

அங்கே "முதற்கட்ட பகுப்பாய்வு, மூலம், சந்திர மேற்பரப்பில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகியவற்றின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது . மேலும் அளவீடுகள் செய்ததில் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஹைட்ரஜன் இருப்பு குறித்து முழுமையான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது" என்று இஸ்ரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏன் முக்கியம்: இந்த 3 கண்டுபிடிப்புகள் மனித குல வரலாற்றையே மாற்றும். ஏன் என்று இங்கே பார்க்கலாம்.

1. நிலவில் உள்ள வெப்பநிலை மாறுபாடு காரணமாக உள்ளே இருக்கும் ஐஸை வெளியே கொண்டு வந்து அதை உருக்க முடியும். இதனால் அங்கே தண்ணீரை திரவ நிலைக்கு கொண்டு வரலாம்.

2. நிலவில் உள்ள சல்பர் உதவியுடன் அங்கே பல்வேறு அமைப்புகளை உருவாக்கலாம். அதாவது பேட்டரி தயாரிப்பது, ராக்கெட் எரிபொருள் தயாரிப்பது, மருந்து தயாரிப்பது, சேமிப்பு கலங்கள் தயாரிப்பது போன்ற பணிகளை செய்யலாம்.

3. சல்பர் மட்டுமின்றி மற்ற கனிமங்களையும் அங்கே பேஸ் அமைக்க பயன்படுத்த முடியும். நிலவில் பேஸ் அமைக்க இவை எல்லாம் உறுதுணையாக இருக்கும்.

4. அங்கே உள்ள ஆக்சிஜன் நீர் தயாரிப்பிலும், மனிதர்கள் அங்கே வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

5. அங்கே ஆக்சிஜன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விவசாயத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஏனென்றால் ஏற்கனவே அங்கே கார்பன் டை ஆக்சைடும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+