கோடை வெயிலுக்கு குளு குளு காற்று வேணுமா.. உங்க ஃபேனில் இதை பண்ணி பாருங்க.. ஈசி டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வெப்ப காலங்களில் பயனுள்ளதாக இருப்பது ஃபேன்கள்தான். ஆனால் வெயில் காலத்தில் ஃபேன்களில் இருந்து குறைவான காற்று வருவதாக பலரும் புலம்புவதுண்டு.. இதை தவிர்த்து ஃபேன்களில் இருந்து காற்று அதிகம் வருவதற்கான சில ஈசியான டிப்ஸ்சை இங்கே காணலாம்..

கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கிய வெப்பம் தற்போது தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் இதே நிலைதான் உள்ளது. தமிழகத்தில் வேலூர் உள்பட பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.

heat wave in tamil nadu - what should be done to make the fan run faster in the house

வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால், இளநீர், நுங்கு, சர்பத் என குளிர்ச்சியான உணவு பொருட்களை நோக்கி ஓட வேண்டியுள்ளது. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்களின் நிலை சொல்லவே வேண்டாம். காலை 9 மணிக்கே தனது வேலையை காட்டும் சூரிய பகவான் மாலை 4 மணி வரை இரக்கம் காட்டுவதில்லை.

வீட்டை விட்டு வெளியே போனால் அடிக்கிற உச்சி வெயில் ஒருபக்கம் புழுக்கத்தால் கொட்டும் வியர்வை ஒருபக்கம் என மக்கள் பாடு கடும் திண்டாட்டம் தான்.. வீட்டிற்கு வந்து விட்டால் சற்று ஆசுவாசம் அடையலாம் தான்.. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் வீடுகளில் ஏசி, ஃபேன் இல்லாவிட்டால் விட்டிற்குள்ளும் புழுக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் ஏசியை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஃபேன்கள்தான் வெப்ப காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பொதுவாக ஃபேன்கள் குளிர்காலத்தில் வேகமாக ஓடுவதாகவும் வெயில் காலத்தில் மெதுவாக ஓடுவதாகவும் நெட்டிசன்கள் இணையத்தில் ஜாலியாக மீம்ஸ்களை போடுவதுண்டு.

வடிவேலு ஒரு காமெடி காட்சியில் மாலா ஃபேனை 12 ம் நெம்பரில் வை..எ ன கதறுவார்.. அதேபோலத்தான் தற்போது ஃபேனை எத்தனை வேகத்தில் வைத்தாலும் காற்று வர மாட்டைக்கிறதே என்று பலரும் யோசிப்பதுண்டு.. அப்படியே காற்று வீசினாலும் அனல் காற்றுத்தான் வருகிறது என பலரும் புலம்புவதுண்டு. .ஃபேன்களில் இருந்து காற்று அதிகம் வருவதற்கான சில ஈசியான டிப்ஸ்சை இங்கே காணலாம்..

* ஃபேன் எந்த திசையில் சுற்றுகிறது என்று கவனிக்க வேண்டும்.
* அதிகம் காற்று தேவைப்படாத குளிர் காலங்களில் ஃபேன்கள் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக சுற்றும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும்.
* வெயில் வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் கடிகார திசைக்கு எதிர்புறமாக அதாவது வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக சுற்றவேண்டும். அப்போதுதான் காற்று சற்று ஜில்லென்று வரும்.

* பொதுவாக கடிகாரத்தின் எதிர்திசையில் சுற்றும் ஃபேன்கள் அதிகமாக காணப்படும். தற்போது ஸ்மார்ட் ஃபேன்களும் சந்தைகளில் ஆக்கிரமிக்க தொடங்கியிருப்பதால் இத்தகைய ஃபேன்களில் செட்டிங்ஸை நாமே மாற்றி நமக்கு வேண்டிய திசையில் சுற்றும் படி மாற்றிக்கொள்ளலாம்.
* ஸ்மார்ட் ஃபேன் இருந்தால் கடிகார திசைக்கு எதிர்திசையில் ஃபேன்கள் சுற்றுகிறதா? என்பதை பார்த்து அதற்கேற்றவாறு செட்டிங்சில் மாற்றிக் கொள்ளுங்கள்..இல்லை சாதாரண ஃபேன்கள் என்றால் எந்த திசையில் சுற்றுகிறது என்பதை இனிமேல் கொஞ்சம் கவனித்து அதற்கேற்ற மாற்றிக்கொள்ளுங்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+