இரட்டை வேடமா? எடப்பாடி சொன்னதுமே.. டக்கென எழுந்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையில் அனல் பறந்த விவாதம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையே காரசாரமாக விவாதம் நடந்ததால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
நீட் விவகாரம், போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்துவது ஆகிய விவகாரங்கள் தொடர்பாக நீண்ட நேரம் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதம் அனல் பறக்க நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் ஆளுநரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்தவில்லை. கடந்த முறை அவையில் தமிழர் பெருமைகளை ஆளுநர் வாசிக்க மறுத்தார். இதற்கெல்லாம் போராட்டம் செய்யாத திமுக எதற்காக தற்போது போராட்டம் நடத்தியது. எதை திசைதிருப்ப ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது திமுக?
முதலமைச்சர் ஸ்டாலின்: இந்த முறை ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம்.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுக் கூட்டங்களுக்கு நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின்: எங்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அங்குதான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும். அனுமதி இல்லாத இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால்தான் வழக்கு, கைது; உங்களது ஆட்சி காலத்திலும் இதுபோன்றுதான் நடந்தது.
எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வு ரத்து செய்யப்பபடும் என கூறினீர்கள். நீட் தேர்வில் இருந்து இதுவரை விலக்கு பெறாதது ஏன்?
முதலமைச்சர் ஸ்டாலின்: இப்போதும் நிச்சயமாக சொல்கிறோம். எங்கள் கருத்தில் மாற்றம் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்கள் வேலை. இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு இருக்கும் என ராகுல் காந்தி கூட கூறியிருந்தார். நாங்கள் இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை. நீங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு உள்ளே வந்தது.
எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது நீங்கள் இருந்த ஆட்சியில்தான்.
முதலமைச்சர் ஸ்டாலின்: தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை ஏற்கவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வை வரவும் விடவில்லை.
எடப்பாடி பழனிசாமி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்துபோய்விட்டது. நீங்கள் நூற்றாண்டு நாணயம் வெளியிடும்போது பாஜக அமைச்சரை அழைத்து வெளியிட்டீர்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின்: ஒன்றிய அமைச்சராக உள்ளவரை அழைத்து வெளியிட்டோம். அதில் என்ன தவறு உள்ளது?
எடப்பாடி பழனிசாமி: நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின்: நீங்கள் நான்கு வேடம் போடுபவர்கள்.
எடப்பாடி பழனிசாமி: நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் கட்சி நிகழ்ச்சி
முதலமைச்சர் ஸ்டாலின்: அது கட்சி நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சிதான்.
அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், அவர்கள் வெளிநடப்பு செய்யப்போகிறார்கள். அதற்காக தயாராக வந்துள்ளனர் என்றார். முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இடையே நீண்ட நேரம் நடந்த காரசார விவாதத்தால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications