கோவை, தேனியில் கொண்டாட்டம்தான்.. 4 மாவட்டங்களில் 3 நாள் மழை கொட்டப்போகுது! வானிலை மையம் குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10.09.2023 முதல் 11.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12.09.2023 & 13.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வென்ட் வொர்த் எஸ்டேட், செர்முல்லி (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 7, சின்னகள்ளார் (கோயம்புத்தூர்) 5, சோலையார் (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 4, புதுச்சத்திரம் (நாமக்கல்), கூடலூர் பஜார் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), வடகுத்து (கடலூர்), பார்வூட் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), எடப்பாடி (சேலம்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), முசிறி (திருச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 3, மேலாளத்தூர் (வேலூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சிறுகுடி (திருச்சி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), பென்னாகரம் (தருமபுரி), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), திரூர் KVK AWS (திருவள்ளூர்), திருவள்ளூர், ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 2, நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), குளித்தலை (கரூர்), வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), கோத்தகிரி (நீலகிரி), நன்னிலம் (திருவாரூர்), தேவிமங்கலம் (திருச்சி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), சிறுகமணி KVK AWS (திருச்சி), தேக்கடி (தேனி), திருத்தணி (திருவள்ளூர்), ஒகேனக்கல் (தருமபுரி), அவலாஞ்சி (நீலகிரி), குடியாத்தம் (வேலூர்), பெரியார் (தேனி), திருச்செங்கோடு (நாமக்கல்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), சேலம், திருத்தணி PTO (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), காரைக்கால், புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கிளென்மார்கன் (நீலகிரி), மயிலாடுதுறை, சோளிங்கர் (இராணிப்பேட்டை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), பொன்மலை (திருச்சி) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications