நீங்க சொன்னது எதுவும் நடக்கலையே! விஜய் கைக்கு போன சர்வே.. பார்த்ததும் ஷாக்! அமைதிக்கு இதுதான் காரணம்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சில நாட்களாக கடும் அமைதியில் இருக்கிறார். அவரின் அமைதிக்கு பின் சர்வே ஒன்றுதான் காரணம் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
கிட்டத்தட்ட கடந்த 3 வாரங்களாக தவெக கட்சி அமைதியாக இருக்கிறது. கணினிகளில் இருக்கும் sleep modeஐ அழுத்தியது போல தவெக மொத்தமாக அமைதியாகி உள்ளது.

கட்சியின் தலைவர் விஜய் எங்கும் பேசவில்லை, எதற்காகவும் பேசவில்லை, ஒரு சில வாழ்த்து போஸ்டுகளை தவிர வேறு போஸ்டுகள் எதையும் விஜய் செய்யவில்லை. கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியில் புதிதாக இணைந்த நாஞ்சில் சம்பத் என்று ஒருவர் கூட கட்சி சார்பாக எதுவும் பேசவில்லை. அருண் மட்டுமே ஒரு சில நிகழ்வுகளில் பங்கேற்றார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த விழா கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டது. இப்படி கட்சி மொத்தமும் அப்படியே சைலன்ட் மோடிற்கு சென்றுள்ளது. சிபிஐ விஜய் விசாரணை நாளை நடக்க உள்ளது அதேபோல் நாளை மறுநாள் ஜனநாயகன் வழக்கு நடக்க உள்ளது. இது இரண்டிற்கும் இடையில் விஜய் மொத்தமாக அமைதியாகி உள்ளார்.
என்ன காரணம்?
அவரின் அமைதிக்கு பின் சர்வே ஒன்றுதான் காரணம் என்கிறார்கள். அந்த சர்வேயில் பின்வரும் விஷயங்கள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
1. சர்வே ஒரு தனியார் நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்ட வாரியாக சாம்பிள் எடுக்கப்பட்டு சர்வே எடுக்கப்பட்டது.
2. இந்த சர்வேயில் விஜய்க்கு 10 சதவிகிதம் கூட வாக்கு சதவிகிதம் இருக்காது என்று கூறப்பட்டு உள்ளது.
3. வடமாவட்டங்களில் அவருக்கு சப்போர்ட் இருக்கலாம்.. அதை தாண்டி வேறு எதுவும் இல்லை என்று சர்வே கூறி உள்ளது.
4. விஜய்க்கு பெண்கள் சப்போர்ட் உள்ளது. ஆனால் அது வெற்றிபெறக்கூடிய அளவிற்கு இல்லை.
5. அதிமுகவிற்கு கீழேதான் இன்னமும் தவெக இருப்பதாக சர்வே கூறி உள்ளது.
6. இந்த சர்வே பார்த்த பின் விஜய் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வெளியே வரவில்லை. அதேபோல் கட்சியில் இருக்கும் தலை ஒருவரிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. நீங்கள் சொன்னது எதுவும் நடக்கலையே.. என்று விஜய் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
திமுக சர்வே
ஆளும் திமுக ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தவெக குறித்த முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமற்ற கருத்து கணிப்பு என்று கூறப்படுகிறது.
இந்த சர்வே தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வாக்காளர் ஆதரவில் நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டியுள்ளது. அதாவது அந்த கட்சிக்கு நகர்புறத்தில் உள்ளது போல கிராமப்புறத்தில் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்று இந்த சர்வேயில் கூறப்படுகிறது.
தவெக சர்வே
சர்வே முடிவுகளின்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் ஆதரவு உள்ளது. மாநகராட்சி மற்றும் நகர்ப்புற மையங்களில் கட்சிக்கு சுமார் 10 சதவீதம் வாக்காளர் ஆதரவு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள்.. நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளதாக இந்த சர்வே கூறுகிறது. அங்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் இன்றும் பெரிய நகரங்களுக்கு வெளியே வசிப்பதால், கிராமப்புறங்களில் தமிழக வெற்றி கழகத்தின் குறைந்த ஆதரவு.. அந்த கட்சிக்கு ஒரு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, சட்டமன்றத் தேர்தல்களில் கிராமப்புற, புறநகர் வாக்காளர்கள் முடிவை தீர்மானிக்க கூடிய சக்தியினராக இருக்கின்றனர். இதனால் தமிழக வெற்றி கழகம் இதை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications