சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை வேளச்சேரியில் மேகவெடிப்பு?.. 10 நிமிஷத்தில் கொட்டி தீர்த்த மழை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வேளச்சேரியில் மேக வெடிப்பு போன்றதொரு மழை பெய்ததாக கூறுகிறார்கள். அதாவது 10 நிமிடத்தில் பெருமழை கொட்டி தீர்த்ததாம்.

Recommended Video

    சென்னை வேளச்சேரியில் மேகவெடிப்பு.. 10 நிமிஷத்தில் கொட்டி தீர்த்த மழை

    தமிழகத்தில் கீழடுக்கு வளி மண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவை ஆகியவற்றில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது.

    இதன் தாக்கம் காரணமாக நேற்று சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருமுல்லைவாயில், மாங்காடு, திருவேற்காடு, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

    சென்னையில் பகலில் சுட்டெரித்த வெயில்..ஜில்லென பெய்த மழை - எத்தனை நாளைக்கு எங்கெங்கு பெய்யும் சென்னையில் பகலில் சுட்டெரித்த வெயில்..ஜில்லென பெய்த மழை - எத்தனை நாளைக்கு எங்கெங்கு பெய்யும்

    காலை வெயில் மாலை மழை

    காலை வெயில் மாலை மழை

    காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை இருட்டிக் கொண்டு நல்ல காற்றுடன் வந்த மழை பூமியை குளிர வைத்தது. பல இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. மாலை வேளை என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தமிழகம்

    தமிழகம்

    இன்றைய தினமும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் சென்னையில் காலையில் வெயில் கொளுத்தியது. இதையடுத்து மாலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் மழை இருட்டிக் கொண்டு வந்தது.

    10 நிமிடத்தில் கனமழை

    10 நிமிடத்தில் கனமழை


    அந்த வகையில் மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், ஆவடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. அது போல் சென்னை ஆதம்பாக்கம், வேளச்சேரி ,மடிப்பாக்கம் பள்ளிகரணை, உள்ளிட்ட பகுதிகளில் 10 நிமிடத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடைசியாக மேகவெடிப்பு

    கடைசியாக மேகவெடிப்பு

    குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்துள்ளது. இதனால் வேக வெடிப்பு மழையா என டிவிட்டரில் டிரென்டாகி வருகிறது. இது மேகவெடிப்பா என்பதை வானிலை ஆய்வு மையம்தான் உறுதிப்படுத்த வேண்டும். அது போல் கிண்டியிலும் கனமழை பெய்தது. இது போன்றதொரு மழை கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி சென்னையின் மெரினா, எம்ஆர்சி நகர், ராயப்பேட்டை, மாம்பலம் பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Heavy cloud burst in Velacherry?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X