இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வீசும் வெப்ப அலை.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவுரை!
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
நாடு முழுக்க பல்வேறு நாடுகளில் வெப்ப அலை ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை இதனால் தீவிரமாக அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவில்லை. முக்கியமாக கடந்த இரண்டு நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது
ஆனாலும் கூட இங்கே வெப்பநிலை அதிகரித்து உள்ளது. முதல் கட்டமாக மும்பையில் வெப்ப அலை வீசும். அதன்பின் கோவாவில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

நேற்று வெப்பநிலை
நேற்று தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழிகாட்டு
தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன . அதில், வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 -3 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

என்ன செய்ய கூடாது?
உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொண்டு சூட்டை தணிக்கும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும். வெளியில் செல்வதாக இருந்தால் முழுதாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

கட்டுப்பாடுகள்
குழந்தைகள், வயதானோர், பெண்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் மிக கடுமையான வெயில் இன்றும் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெயில் அடிக்கும். இன்னொரு பக்கம் வடக்கு தமிழகம் போலவே மத்திய தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். திருத்தணியில் வெயில் வாட்டி எடுக்கும். ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை மதுரை, திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இதில் வேலூரில் மிக அதிகமாக வெயில் இருக்கும். சென்னையில் கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான அனல் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications