விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்.. இவங்களுக்கு அனுமதி இல்லையாம்!
சென்னை: வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு 20 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேசமயம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வேலூர் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய இடவசதி, குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் இதற்கான மைதானம் அமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க க்யூ-ஆர் கோட் (QR Code) அடிப்படையிலான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள இந்த நிகழ்ச்சிக்காக, அகரம்சேரியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான திடல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 25,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி அக்கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் மனு அளித்திருந்தார். இதனைப் பரிசீலித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், நிகழ்ச்சி நடத்துவதற்கு 20 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கிய பின்னரே அதிகாரப்பூர்வ அனுமதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் வேலூர் வருகிறார். உற்சாக மிகுதியில் அவரது வாகனத்தை யாரும் பின்தொடர்ந்து செல்லக் கூடாது. கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களே இருப்பதால் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஏற்கனவே சேலம், ஈரோடு போன்ற இடங்களில் தனது உரையின் மூலம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்த விஜய், வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் எப்படியான பேச்சைப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications