இன்னைக்கு இரவு கனமழை இருக்கு.. 10 மணி வரை சென்னை உள்பட 18 மாவட்டங்களுக்கு அலர்ட்.. ஐஎம்டி வார்னிங்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில் இன்று இரவும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, குமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரங்களிலேயே மழை பெய்து வருகிறது. காலையில் வெளிச்சத்துடன் கூடிய வெயில் அடித்தபடியும், மாலை நேரங்களில் இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய மழை கொட்டுகிறது. தற்போது வரை இயல்பை விட அதிகமாகவே பருவமழை பெய்துள்ளது.

இரவு 10 மணி வரை..
தமிழகம் முழுக்க பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் இன்று இரவும் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்ட வானிலை மையம் அறிவிப்பில், தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நாகை, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது. வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.." என்று கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "நேற்று (21-10-26) தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (22-10-26) காலை 08.30 மணி அளவில் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.
இதனால் இன்று குமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நாளையும் மிக கனமழை வெளுக்கும்
நாளை குமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் எங்கெல்லாம் மழை
24 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
குமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே கனமழை பெய்வதால் இந்த மாவட்ட மக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Click it and Unblock the Notifications
