ரெடியாகுங்க.. சென்னையில் இடி மின்னலோடு மழை கொட்டப்போகுது! கோவை, நீலகிரிக்கு கனமழை அலர்ட்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
நேற்று (25.07.2023) வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் (26.07.2023) அதே பகுதிகளில் நிலவுகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.07.2023 முதல் 01.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அவலாஞ்சி (நீலகிரி), சின்னகல்லாறு (கோயம்புத்தூர்) 8, க்ளென்மார்கன் (நீலகிரி) 7, நடுவட்டம் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்) தலா 6, கூடலூர் பஜார் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 5, ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 4, வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பாலக்கோடு (தருமபுரி), கல்லட்டி (நீலகிரி), எமரலட் (நீலகிரி), பெரியார் (தேனி), திருப்பத்தூர், ஆழியாறு (கோயம்புத்தூர்) தலா 2, தருமபுரி PTO, திருவள்ளூர், வாணியம்பாடி (திருப்பத்தூர்), கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தருமபுரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), குழித்துறை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ஹரூர் (தருமபுரி), பாப்பாரப்பட்டி KVK AWS (தருமபுரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஆரணி (திருவண்ணாமலை), உதகமண்டலம் (நீலகிரி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), ராசிபுரம் (நாமக்கல்), ஆம்பூர் (திருப்பத்தூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), தருமபுரி, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), போளூர் (திருவண்ணாமலை), மேலாளத்தூர் (வேலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), தஞ்சாவூர், மேட்டூர் (சேலம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), சூளகிரி (கிருஷ்ணகிரி), குந்தா பாலம் (நீலகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), கெத்தண்டபட்டி (திருப்பத்தூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), அம்மூர் (வாலாஜா ரயில்வே) (ராணிப்பேட்டை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி) தலா 1."
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications