மேகம் கருக்கும்.. மின்னல் சிரிக்கும்.. சாரல் அடிக்கும்! கீழே “ஹெவி”.. மேலே “லைட்” - வானிலை அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது." என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 அடுத்த 4 நாட்கள்

அடுத்த 4 நாட்கள்

நாளை (30.11.2022) மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்து இருக்கும் வானிலை மையம்
டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்து உள்ளது.

சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்து இருக்கும் வானிலை ஆய்வு மையம் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என கணித்து உள்ளது.

கன்னியாகுமரியில் அதிக மழை

கன்னியாகுமரியில் அதிக மழை

கன்னிமார் (கன்னியாகுமரி) 12, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 9, பூதபாண்டி (கன்னியாகுமரி) 8, சோத்துப்பாறை (தேனி), மஞ்சளார் (தேனி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7, போடிநாயக்கனூர் (தேனி), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 6, மேட்டூர் (சேலம்), கயத்தார் ARG (தூத்துக்குடி), தூத்துக்குடி, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), முக்கடல் அணை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 5, ஆழியார் (கோவை), மேட்டுப்பாளையம் (கோவை), வத்திராயிருப்பு (விருதுநகர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), தொண்டி (ராமநாதபுரம்), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 4, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), விருதுநகர் AWS, மதுரை தெற்கு (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), பெரியநாயக்கன்பாளையம் (கோவை), கொத்தவாச்சேரி (கடலூர்), கயத்தாறு (தூத்துக்குடி), தல்லாகுளம் (மதுரை), குன்னூர் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி) தலா 3 என்ற அளவில் பெய்துள்ளது.

குறைவான மழை

குறைவான மழை

சிவகாசி (விருதுநகர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சிவலோகம் (கன்னியாகுமரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ராஜபாளையம் (விருதுநகர்), பரலியார் (நீலகிரி), தேக்கடி (தேனி), சிவகிரி (தென்காசி) தலா 2, அழகரை எஸ்டேட் (நீலகிரி), அம்முண்டி (வேலூர்), சித்தார் (கன்னியாகுமரி), பேரையூர் (மதுரை), நன்னிலம் (திருவாரூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), களியல் (கன்னியாகுமரி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), வீரபாண்டி (தேனி), பவானிசாகர் (ஈரோடு), ஆண்டிபட்டி (தேனி), ஆண்டிபட்டி (மதுரை), அரண்மனைப்புதூர் (தேனி), கடம்பூர் (தூத்துக்குடி), கும்பகோணம் (தஞ்சாவூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), குன்னூர் PTO (நீலகிரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கோத்தகிரி (நீலகிரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), திருமங்கலம் (மதுரை), பிலவாக்கல் (விருதுநகர்), ஈரோடு, சின்னக்கல்லார் (கோவை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூர்) தலா 1. என்ற அளவில் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+