எது சென்னையில மழை பெய்யுமா? கோவை, நீலகிரியில் வெளுத்து வாங்கப்போகுதாமே.. லிஸ்டில் “தி” மாவட்டங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்பு உள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.07.2023 முதல் 10.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அவலாஞ்சி (நீலகிரி) 20, மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்) தலா 11, வொர்த் எஸ்டேட் (நீலகிரி), குண்டர் அணை (தென்காசி) தலா 9, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), அடவிநயினார்கோயில் அணை தென்காசி, தேவாலா (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), ஊத்து (திருநெல்வேலி) தலா 7, சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), கிளென்மார்கன் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) தலா 6, பார்வூட் (நீலகிரி), காக்காச்சி (திருநெல்வேலி), பெரியார் (தேனி) தலா 5, வுட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), கூடலூர் பஜார் (நீலகிரி), சேர்வலர் அணை (திருநெல்வேலி), செங்கோட்டை (தென்காசி), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), எமரலாடு (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), தேக்கடி (தேனி), பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்) தலா 4, சிவலோகம் (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), சிற்றாறு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 3, குந்தா பாலம் (நீலகிரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கடனா அணை (தென்காசி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), ராமநதி அணை (தென்காசி), ஆனைமலை தாலுகா அலுவலகம் கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), TNAU கோயம்புத்தூர், கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 2, கருப்பாநதி அணை (தென்காசி), பாபநாசம் (திருநெல்வேலி), கொடநாடு (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), அடையாமடை (கன்னியாகுமரி), ஆழியாறு (கோயம்புத்தூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கல்லட்டி (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), குன்னூர் PTO (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), குழித்துறை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பிலவாக்கல் (விருதுநகர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), ராஜபாளையம் (விருதுநகர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), கெத்தை (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), குளச்சல் (கன்னியாகுமரி) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்











Click it and Unblock the Notifications