சென்னையில் இரவு முழுக்க பெய்த மழை.. பல பகுதிகளில் தேங்கிய நீர்.. இன்று மழை பெய்யுமா? ரிப்போர்ட்
சென்னை: சென்னையில் இரவு முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இரவு 9 மணிக்கு பின் தொடங்கும் மழை பின்னிரவு வரை பெய்கிறது. தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

சென்னை
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. சென்னை புறநகர் பகுதியில் பெய்த பலத்த மழையில் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் ஓடியது. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. சென்னையில் சில பகுதிகளும் இதனால் இருளில் மூழ்கின.

சுரங்க பாதை
வெள்ள நீரில் மூழ்கிய சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகிறார்கள் கனமழை காரணமாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏராளமான சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின. தாம்பரம் மேம்பாலம் அருகே உள்ள ரெயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியதால் கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்திற்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

எங்கு பெய்தது
நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும், சென்னையில் நிலவரம் எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று மழை பெய்யுமா?
21.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, நாளை மறுநாள்
22.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23.06.2022, 24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலை என்ன?
சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

நேற்று பெய்த மழை
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) 13, தரமணி ARG (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 11, காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), தாம்பரம் (செங்கல்பட்டு), சென்னை விமான நிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), டிஜிபி அலுவலகம் (சென்னை) தலா 9, ACS மருத்துவக் கல்லூரி ARG (காஞ்சிபுரம்), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 8, சோழிங்கநல்லூர் (சென்னை), அரக்கோணம் (இராணிப்பேட்டை) தலா 7, தென்பரநாடு (திருச்சி), எம்ஜிஆர் நகர் (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்) தலா 6, திருவள்ளூர் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), பெரம்பூர் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சோழவரம் (திருவள்ளூர்), கொடநாடு (நீலகிரி), வெங்கூர் (கள்ளக்குறிச்சி), சூலாங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), பூண்டி (திருவள்ளூர்), குன்னூர் (நீலகிரி), கெட்டி (நீலகிரி) தலா 5, காட்பாடி (வேலூர்), கள்ளிக்குடி (மதுரை), விருதுநகர் (விருதுநகர்), அம்முண்டி (வேலூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), பொன்னை அணை (வேலூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 4, வேலூர் (வேலூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), கலவை AWS (இராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), மேலூர் (மதுரை) தலா 3, ஆற்காடு (ராணிப்பேட்டை), செஞ்சி (விழுப்புரம்), கோத்தகிரி (நீலகிரி), அரியலூர் (அரியலூர்), அமராவதி அணை (திருப்பூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), குன்னூர் PTO (நீலகிரி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), உசிலம்பட்டி (மதுரை) தலா 2, மருங்காபுரி (திருச்சி), சேலம் (சேலம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), செய்யாறு (திருவண்ணாமலை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), திண்டிவனம் (விழுப்புரம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), பாடலூர் (பெரம்பலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), குந்தா பாலம் (நீலகிரி), ஆரணி (திருவண்ணாமலை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), சோலையாறு (கோயம்புத்தூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), திருப்போரூர் (செங்கல்பட்டு), மேலாளத்தூர் (வேலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), ஓசூர் (கிருஷ்ணகிரி), திருக்கழுங்குன்றம் (செங்கல்பட்டு), விருதாச்சலம் (கடலூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), திருப்புவனம் (சிவகங்கை), குடியாத்தம் (வேலூர்), அவலாஞ்சி (நீலகிரி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 1.
Recommended Video

மீனவர்களுக்கான எச்சரிக்கை :
20.06.2022: கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 21.06.2022, 24.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 22.06.2022, 23.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications