மீண்டும் ரவுண்டு கட்ட போகும் மழை.. இன்று இந்த 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. ஜில் அறிவிப்பு
இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில், இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஜில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது... இந்த பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்து இருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தது. அதன்படியே மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.. இந்நிலையில், இன்று மட்டும் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளி மண்டல சுழற்சியால், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்... நாகை, மயிலாடுதுறை, கடலுார், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும், இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களிலும், பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது... அண்ணாநகர், முகப்பேர், உள்ளிட்ட பல இடங்களில் சிறிது நேரம் கனத்த மழை பெய்ததால், குளிர்ந்த நிலை நிலவியது!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications