சேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 31ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பில்லூர் அணை, சோலையாறு அணை, பவானிசாகர் அணை, ஆழியாறு அணை, அமராவதி அணை உள்ளிட்ட
பல அணைகள் நிரம்பி வழிகின்றன. அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. நேற்றைய தினம் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. நாமக்கல், சேலம், ஆத்தூர், பெரம்பூர், கடலூர், நீலகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது.

சேலம், நீலகிரி, கோவை

சேலம், நீலகிரி, கோவை

சேலம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டம், புதுச்சேரி காரைக்காரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிதமான மழை

மிதமான மழை

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 31ஆம் தேதி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேக மூட்டம்

மேக மூட்டம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று முதல் 29ஆம் தேதி வரைக்கும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+