இன்னிக்கு ராத்திரி.. தென் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. சூப்பர் செய்தி தந்த வெதர்மேன்
தென் தமிழகத்தில் மழை பெய்ய போகுது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்
சென்னை: நேற்று வட மாவட்டங்களுக்கு குறிப்பாக சென்னைக்கு நல்ல மழை பெய்தது.. இன்று தென் மாவட்டங்களுக்கு ஜாலிதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திடீரென கோடை மழை வெடித்துள்ளது. கொரோனாவைரஸ் பிடியிலும் கூடவே கடும் வெயிலிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இது நிச்சயம் நல்ல செய்தி என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அப்படி ஒரு புழுக்கத்தில் மக்கள் உள்ளனர்.

நேற்று தமிழகத்தின் வட பகுதிகளில் குறிப்பாக சென்னையில் சரியான மழை பெய்தது. வலுவான சூறைக் காற்றுடன் பெய்த மழையால் நகரமே கூலாகிப் போனது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சூப்பர் மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று லேட் நைட் அல்லது நாளை அதிகாலையில் சூப்பர் மழை காத்திருக்காம்.
சென்னையைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் முழுவதும் அவ்வப்போது சூறைக் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்காம். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று அதிகபட்சமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பெல்ட்தான் நல்ல மழைப் பொழிவை சந்தித்துள்ளது. அதாவது 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
பிற மாவட்டங்களில் மொத்தமாக 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக பெரம்பலூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தென்காசி, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், வேலூர், கரூர் மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படியான மழைப் பொழிவு இருந்ததாக வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications