இடி மின்னலுடன் நீலகிரியில் கனமழை...தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு சாரல் மழை - வானிலையின் ஜில் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Heavy rain in the Nilgiris with thunder and lightning Cloudy in Chennai

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பங்குனி மாதம் போல வெயில் சுட்டெரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மாலை நேரங்களில் மேகங்கள் சூழ்ந்தாலும் மழை பெய்தபாடில்லை.

அதே நேரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த 24 மணிநேரத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவலாவில் 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வால்பாறை, கோவையில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16 மற்றும் 17ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக் கூடும். குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இன்றைய தினம் ஒடிசா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 16ஆம் தேதிவரைக்கும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+