சென்னையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை... குஷியான சென்னைவாசிகள்!
சென்னை: சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்து, பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு நேர்மாறாக சற்று அதிகமாகவே மழை பெய்தது. இதனால் மாநிலத்திலுள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் பரவலாக நிரம்பி வருகின்றன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..
இந்நிலையில், தற்போது வேளச்சேரி, ஆர்ஏ புறம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் என நகரின் பல்வேறு இடங்களிலும் நகரைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது. திடீரென பெய்த இந்த மழை சென்னைவாசிகளை குஷிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும், கனமழை காரணமாக ஓரிரு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட அதிகமாகப் பெய்துள்ளதால், சென்னைக்கு நீர் ஆதாரமாகத் திகழும் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications