தமிழகத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.. வெள்ளக்காடான மாவட்டங்கள்.. நீலகிரியில் அதிதீவிர மழை
தமிழகத்தில் நேற்று இரவு பல மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு பல மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அருகே இருக்கும் மாவட்டங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறது.

மழைக்கு காரணம்
இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று தமிழகம் முழுக்க நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், சேலம், குமரி, கொடைக்கானல், கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சை, நீலகிரி, திருவள்ளூரில் இரவு முழுக்க கனமழை பெய்தது. நீலகிரியில்தான் நேற்று இரவு அதிகமாக மழை பெய்தது.

இப்போதும் பெய்கிறது
இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது கோவையில் சாரல் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மற்றும் நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது.

நிலை என்ன
தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவான 71 அடியை எட்டியுள்ளது. கொடைக்கானலில் பெய்து வரும் மழை காரணமாக, மலை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஊட்டியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள்
குமரி, ராமேஸ்வரம், கடலூர் ஆகிய பகுதிகளில் 60 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications