மிரட்டும் இடியுடன்.. சென்னையில் மீண்டும் கனமழை.. ஆஃப் மோடுக்கு சென்ற ஃபேன்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை பெய்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த அக்டோபர் 31, நவம்பர் 1, 2, ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது.

இதனால் சில இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மழை நீரை அகற்றிவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, எழும்பூர், பெரம்பூர், சூளைமேடு, புரசை, கோயம்பேடு, கிண்டி, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அது போல் நள்ளிரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று விடியற்காலையிலும் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று காலை முதலே வெயில் வருவதும் மேகங்கள் வருவதுமாக இருந்தது. அப்போது மதியம் 1.30 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், பெரம்பூர், வியாசர்பாடி, முகப்பேர், அண்ணா நகர், பேசின் பாலம், ஓட்டேரி, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது.
அது போல் தாம்பரம், பெருங்களத்தூர், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பலத்த இடி சப்தத்துடன் மழை பெய்கிறது, இதனால் சென்னை முழுதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையில் ஆங்காங்கே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications