6 மணி நேரமாக விடுவேனா என்கிறது! நான்ஸ்டாப் மழை.. காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட மக்கள் அவதி
செங்கல்பட்டு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆத்தூர், வல்லம், திம்மாவரம், புலிப்பாக்கம், செட்டிப்புண்ணியம், ஆலப்பாக்கம், மெய்யூர் சிங்கபெருமாள்கோவில், உள்ளிட்ட பகுதியில் இன்னும் மழை விடாமல் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.

மகிழ்ச்சி
இதனால் கடும் குளிர் காற்று வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் 5 நாட்கள் வட தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

புரேவி புயல்
நிவர், புரேவி புயலால் கன மழை பெய்து கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் வரும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி அதிகாலை முதலே வானம் மேக மூட்டமாக இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

ஓரிக்கை
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

இடைவிடாமல் பெய்யும் மழை
தொடர்ந்து 6 மணி நேரமாக மழை விடாமல் பெய்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ,வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அச்சத்துடனேயே சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications