சென்னையில் காலையிலிருந்து விட்டு விட்டு கனமழை.. இரவிலும் பெய்யும்
இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Recommended Video

சென்னை: இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இரவிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்கிறது. காலையில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
எழும்பூர், கிண்டி, வடபழனி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம்,தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. செங்கல்பட்டிலும் கனமழை பெய்கிறது.
கனமழை பெய்வதால் சென்னையில் காலையிலும் மாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் வடபழனி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று முழுக்க சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இரவிலும் கனமழையை எதிர்பார்க்க முடியும்.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்கிறது.
இதனால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications