சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்
Recommended Video

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆகஸ்டு மாதத்தில் சராசரி அளவை ஒப்பிடும் போது, 99 சதவீதம் வரை மழை பெய்யலாம் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியை ஒட்டியே இருக்கும். சராசரியில் இருந்து 94 சதவீதம் முதல் 106 சதவீதம் வரை மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை ரயின்ஸ் என்ற தனியார் இணையதளம் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மந்தமான வானிலை காணப்பபடும் என தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டுமே தென்மேற்குப் பருவமழை தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் இது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிர பகுதிகளில் நகரக்கூடும். எனவே தமிழகத்தில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications