13 மாவட்டங்களில் வெளுத்தெடுக்க போகும் கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்.. வானிலை மைய ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இன்றில் இருந்து மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இன்று மழை
அதன்படி தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர்,தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பிற்பகலுக்கு பின் மழை பெய்யும்.

அதிகாலை
சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்யும். புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நாளையும் தமிழ்நாட்டில் தீவிரமாக மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை நாளை பெய்யும்.

நாளை நிலவரம்
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது.

2 - 3 மணி நேரம்
அடுத்த 2-3 மணி நேரத்திற்கு சென்னையில் இந்த மழை நீடிக்கும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடலில் காற்று வீசும் அளவு இயல்பாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications