சென்னையில் இன்னைக்கு நைட்டு விட்டு விளாசப் போகுது மழை.. 20 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் ஒரு வாரமாக விடாமல் மழை பெய்து வருகிறது. அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்துக்கும் கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் இன்றைக்கு இரவும் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை 58 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இயல்பை விட தற்போது வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என்றும் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவித்து இருந்தது.

சென்னை உள்பட 20 மாவட்டங்கள்
இந்த நிலையின் இன்று இரவும் சென்னை உள்பட தமிழகம் முழுக்க 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில், தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, குமரி, நாகை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர், காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுக்கும் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி. இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, இண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர். இராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம். கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சுனமழை பெய்யவாய்ப்புள்ளது.
பதிவான மழை அளவு
* கோத்தகிரி (நீலகிரி) 14,
* கோவிலங்குளம் (விருதுநகர்) 13,
* அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) 13.
* பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்) 12,
* அருப்புக்கோட்டை (விருதுநகர்), ராஜபாளையம் (விருதுநகர்), சிவகாசி (விருதுநகர்). கவுந்தப்பாடி (ஈரோடு) தலா 11,
* கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 10,
* பர்லியார் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பேரையூர் (மதுரை), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), கோடநாடு (நீலகிரி), ஆழியார் (கோயம்புத்தூர்). பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 9,
* காயல்பட்டினம் (தூத்துக்குடி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கெத்தை (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 8.
* அழகரை எஸ்டேட் (நீலகிரி) 7.
* குந்தா பாலம் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), அன்னூர் (கோயம்புத்தூர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 6 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications