வந்தாச்சு அறிவிப்பு.. அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை நீடிக்கும்.. இந்த 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழை
அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த 5 நாட்களுக்கு கனத்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... அதன்படி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கன மழையும், 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னையில் கடந்த 2, 3 நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது.. இதனால் பல்வேறு பகுதிகள் குளிர்ந்து காணப்படுகின்றன.
தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும், நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

பலத்த மழை
தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது... இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கும் மழை இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கனமழை
வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, தேனி, நீலகிரி சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்..

சென்னை
கோவை, தேனி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும். திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
Recommended Video

மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வடமேற்கு வங்க கடல் பகுதியில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications