இந்த 7 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்
Recommended Video

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று மதியம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களை சந்தித்தார்.
தனது பேட்டியில், பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. அதேநேரம், கன்னியாகுமரி பகுதி முதல் தமிழகத்தின் உள் பகுதி வரை, வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

செங்கல்பட்டு அதிகபட்சம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மதுராந்தகத்தில் 14 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மகாபலிபுரம்
மகாபலிபுரம் 10 செ.மீ, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆரணி ஆகிய நகரங்களில் தலா 7 செ.மீ, அவிநாசி, போரூர், கடலூர், சோழவரம், நெய்வேலி, திருவண்ணாமலை, காரைக்குடி, சீர்காழி, செய்யாறு, தாமரைப்பாக்கம், சங்கராபுரம், மணிமுத்தாறு, பாண்டிச்சேரி, வேலூர் நகரங்களில் தலா 5 செ.மீ உட்பட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

கன மழை எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கனமழையை பொறுத்தளவில், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நவம்பர் 24, 25, 26 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை அளவு குறைந்து விடும். மீனவர்களுக்கான சிறப்பு வானிலை எச்சரிக்கை எதுவும் கிடையாது. சென்னையில் அக்டோபர் 1ம் தேதி முதல் இதுவரை 42 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 44% குறைவு. தமிழகம் முழுக்க அக்டோபர் 1 முதல் 28 செ.மீ மழை பெய்துள்ளது. வழக்கமான அளவு 33 செ.மீ. எனவே 13 சதவீதம் குறைவாக உள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications