ஏப்.14 முதல்.. தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.. தேதி போட்டு டேட்டா கொடுத்த வானிலை மையம்
சென்னை: நாளை மறுநாள் அதாவது, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு முதல், தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் சில பகுதிகளில் ஆங்காங்கே இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகம் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மிதமானது முதல் கனமானது வரையிலான மழையாக இருக்கும்.

எந்த மாவட்டங்கள்
அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மட்டுமில்லாமல் வட உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

எந்தெந்த நாட்களில் எங்கு மழை
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 15ம் தேதி கனமழை பெய்யும். 16ம் தேதி, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் தெரிவித்தார்.
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications