இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! அதுல ஒன்னு உங்க மாவட்டமா பாருங்க? சென்னையில் நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது போல் சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16.11.2022 முதல் 18.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

heavy rainfall alert for 9 districts in Tamilnadu

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

heavy rainfall alert for 9 districts in Tamilnadu

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 9, வாலிநோகம் (ராமநாதபுரம்) 7, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 5, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), இரணியல் (கன்னியாகுமரி), கீரனூர் (புதுக்கோட்டை), குப்பநத்தம் (வட்டாரம்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), வேப்பூர் (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 4, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தாம்பரம் (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), திருப்போரூர் (செங்கல்பட்டு), விருதாச்சலம் (கடலூர்), வேதநத்தம் (தூத்துக்குடி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), பரமக்குடி (இராமநாதபுரம்), சின்கோனா (கோயம்புத்தூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), செங்கல்பட்டு, பூந்தமல்லி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), பாபநாசம் (திருநெல்வேலி), எறையூர் (கள்ளக்குறிச்சி), விருகாவூர் (கள்ளக்குறிச்சி), குண்டடம் (திருப்பூர்) தலா 3, கடலூர், எம்ஜிஆர் நகர் (சென்னை), சிதம்பரம் (கடலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), வல்லம் (தஞ்சாவூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஆயின்குடி (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), பெரம்பூர் (சென்னை), இலுப்பூர் (புதுக்கோட்டை), மதுக்கூர் (தஞ்சாவூர்), குழித்துறை (கன்னியாகுமரி), பொன்னேரி (திருவள்ளூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), வானமாதேவி (கடலூர்), வெட்டிகாடு (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), மரக்காணம் (விழுப்புரம்), சோலையார் (கோயம்புத்தூர்), காட்டுமயிலூர் (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருவாலங்காடு (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), குளச்சல் (கன்னியாகுமரி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), களியல் (கன்னியாகுமரி), காஞ்சிபுரம், அமராவதி அணை (திருப்பூர்), திருத்தணி (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), பண்ருட்டி (கடலூர்), நாங்குநேரி (திருநெல்வேலி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), உடையாளிபட்டி (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி), சூரங்குடி (தூத்துக்குடி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), தக்கலை (கன்னியாகுமரி), சீர்காழி (மயிலாடுதுறை), கடலாடி (இராமநாதபுரம்), கரியகோவில் அணை (சேலம்) தலா 2, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), வடகுத்து (கடலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), தூத்துக்குடி, கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), குருங்குளம் (தஞ்சாவூர்), கள்ளக்குறிச்சி, குடிதாங்கி (கடலூர்), அதனக்கோட்டை (புதுக்கோட்டை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கறம்பக்குடி (புதுக்கோட்டை), ஆண்டிபட்டி (மதுரை), கோவில்பட்டி (திருச்சி), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கலசபாக்கம் (திருவண்ணாமலை), பெருங்களூர் (புதுக்கோட்டை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சோளிங்கநல்லூர் (சென்னை), ராமநாதபுரம், திருவள்ளூர், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கிண்ணக்கொரை (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), வாடிப்பட்டி (மதுரை), கோத்தகிரி (நீலகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), பெலாந்துறை (கடலூர்), உசிலம்பட்டி (மதுரை), ஆற்காடு (இராணிப்பேட்டை), முத்துப்பேட்டை (திருவாரூர்), பூண்டி (திருவள்ளூர்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), கொரட்டூர் (திருவள்ளூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), குன்னூர் PTO (நீலகிரி), ஆழியாறு (கோயம்புத்தூர்), காட்பாடி (வேலூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), செய்யாறு (திருவண்ணாமலை), ஆனைமடுவு அணை (சேலம்), செய்யூர் (செங்கல்பட்டு), கே.எம்.கோயில் (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), சேத்பேட்டை (திருவண்ணாமலை), லால்பேட்டை (கடலூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), வாலாஜா (இராணிப்பேட்டை), பறளியாறு (நீலகிரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), புவனகிரி (கடலூர்), பொன்னை அணை (வேலூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), பாரூர் (கிருஷ்ணகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 1.

heavy rainfall alert for 9 districts in Tamilnadu

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

14.11.2022: லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

heavy rainfall alert for 9 districts in Tamilnadu

17.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+