நீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலஞ்சியில் 15 செமீ மழையும் சோலையாரில் 13 செமீ, சின்னக்கல்லார் 12 செமீ மழையும் பதிவாகியுள்ளது. நடுவட்டம், சித்தார் , தேவலாவில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

பாபநாசம், கன்னியாகுமாரி, நாகர்கோவில், பெருஞ்சாணியில் 4 செமீ மழையும், கொட்டாரம், பூதப்பாண்டி,பேச்சிப்பாறை, இரணியலில் 3 செமீ, சிதம்பரம் 2 செமீ, தென்காசி 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதி கனமழைக்கு வாய்ப்பு

அதி கனமழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

மிதமான மழைக்கு வாய்ப்பு

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

இடி மின்னல் மழை

இடி மின்னல் மழை

நீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

வானம் மேக மூட்டம்

வானம் மேக மூட்டம்


ஜூலை 26 முதல் 28ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

பலத்த காற்று வீசும்

பலத்த காற்று வீசும்

இன்று தமிழக கடலோரம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் வரும் தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+