தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்பசலனம், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யும் என எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்ன கல்லாறில் 11 செமீ, வால்பாறை மற்றும் கடலூரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது வானிலை மையம்.
நாடு முழுவதும் நேற்று வரை பெய்த மழையின் அளவு 19 சதவீதம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது வானிலை மையம். இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது.
இது போல அவ்வப்போது பெய்யும் கனமழையால் மழை அளவு சராசரியை தொட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications