தொடர் விடுமுறையால் சொந்த ஊர் கிளம்பிய மக்கள்! ஸ்தம்பித்த சென்னை! கடும் போக்குவரத்து நெரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உழைப்பாளர் தினம், வார இறுதி நாள் என தொடர் விடுமுறை வருவதாலும், அடுத்ததாக திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடப்பதாலும், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் படையெடுத்துள்ளனர். இதனால் இன்று மாலை முதலே சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளதால், தாம்பரம், பெங்களத்தூர் - வண்டலூர், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கார்கள் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. ஊர்ந்தபடி மெதுவாக சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Heavy Traffic in Chennai GST Road as Holiday Rush Triggers Mass Travel

சென்னையில் போக்குவரத்து நெரிசல்

சித்ரா பவுர்ணமி, உழைப்பாளர் தினம், வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் வசித்து வரும் வெளிமாவட்டத்தை சேர்ந்த பலரும் இன்று மதியம் முதலே சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். கார்கள், பஸ்களில் பலரும் புறப்பட்டுள்ளதால் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பஸ் மற்றும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரே நேரத்தில் பலரும் சொந்த ஊர் புறப்பட்டுள்ளதால் பஸ், ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டன. இதேபோன்று சித்ரா பவுர்ணமி என்பதால், பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.

ஊர்ந்தபடி சென்ற வாகனங்கள்

இதனால் இன்று காலை முதலே ஏராளமான பயணிகள் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர். இதேபோல் நாளை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதாலும், நாளை மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருவதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இன்று காலை முதலே சொந்த ஊர்களுக்கு தங்களது சொந்த வாகனங்களிலும், பஸ், ரயில்களிலும் புறப்பட்டனர்.

திருவண்ணாமலை மற்றும் தென்மாவட்டங்க ளுக்கு செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டதால் பெங்களத்தூர் - வண்டலூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதிய நேரத்திலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்ற நிலையில் மாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள், கார்கள் என வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. சென்னை கிளாம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர், ஜிஎஸ்டி சாலை, வண்டலூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+