Sofa Model அரசு.. திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டுமே போலீஸ் குறி! தவெகவுக்கு உதயநிதி கொடுத்த வார்னிங்!
சென்னை: விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை இன்று காலை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தவெகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று காலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனே கைது செய்தனர்.

இந்நிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்கண்டேயன்
தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
தவெக அரசு
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை. இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சி
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது. எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
அரசின் அராஜகம்
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி." என கூறியுளார்.


Click it and Unblock the Notifications
