பெங்களூர் தலையெழுத்தையே மாற்றிய கார்கள்.. மொத்த எண்ணிக்கை 25 லட்சம்! மூச்சு திணறும் நகரம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவில் அதிகமாக பிரைவேட் கார்களை கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முதல் இடத்தில் இருக்கிறது. இதனால்தான் சர்வதேச அளவில் அதிக டிராபிக் கொண்ட நகரங்களின் பட்டியலிலும் பெங்களூர் முன்னணியில் இருக்கிறது.

இந்தியாவில் டெல்லியில்தான் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், தனியார் கார்கள் என்று வரும்போது, பெங்களூர்தான் நெம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

Bengaluru

இந்தியாவின் சிலிகான் வேலியாக கருதப்படும் பெங்களூரில் போதுமான அளவுக்கு பொது போக்குவரத்து இல்லாதது, அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக பேருந்துகள் இயக்கப்படாதது, ஐடி ஊழியர்கள் அதிகமாக இருப்பதால் வாங்கும் சக்தி அதிகமாக இருப்பது, மக்களை கார்களை நோக்கி தள்ளியிருக்கின்றன. பெங்களூரை பொறுத்தவரை அதன் மக்கள் தொகையில் ஒவ்வொரு 4-5 பேருக்கு ஒரு கார் என்று இருக்கிறது. மொத்தமாக 25 லட்சம் தனியார் கார்கள் இயங்கி வருகின்றன.

இதன் காரணமாக பெங்களூர் இப்போது மூச்சு திணற தொடங்கியிருக்கிறது. அதாவது, பெங்களூர் சாலைகள் 25 லட்சம் கார்களை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்படவில்லை. எனவே பீக் ஹவர்ஸில் சில கி.மீ தூரத்தை கடப்பதற்கே 1-2 மணி நேரம் ஆகிவிடுகிறது. இது தவிர, காற்று மாசு மற்றும் ஒலி மாசும் ஏற்படுகிறது. இந்த தனியார் கார்களுடன் சேர்த்தால், பெங்களூரில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1.1 கோடியை தொடுகிறது. இதில் கார்களின் எண்ணிக்கை மட்டும் 22% ஆகும்.

இந்த அதீத எண்ணிக்கையை கட்டுப்படுத்தினால் மட்டும்தான் பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை சரியாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரே நிறுவனத்தில் வேலைக்கு செல்பவர்கள் தனித்தனியாக கார்களை பயன்படுத்தாமல் ஒரே காரில் போகலாம்.

அனைத்து பகுதிகளுக்கும் போதுமான அளவுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டால், மக்கள் தனியார் வானங்களுக்கு பதில் பஸ்ஸையே தேர்ந்தெடுப்பார்கள். அதேபோல மெட்ரோ ரயில் சேவையையும் அதிகரிக்க வேண்டும். கார் பார்க்கிங் கட்டணத்தை டபுள் ஆக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையெல்லாம் செய்தால் பெங்களூரில் டிராபிக் பிரச்சனை இருக்காது. ஆனால், அரசு இதை உறுதியாக செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+