சென்னையே திணறுது.. மொத்த ஊரும் மெரினாவை நோக்கி படையெடுப்பு.. கடும் போக்குவரத்து நெரிசலில் அவதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விமான சாகச நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் மெரினா நோக்கி படையெடுத்துள்ள நிலையில், சென்னையில் அடையாறு பாலம் உள்ளிட்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் தற்போது தொடங்கி உள்ள இந்த விமான வான் சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

chennai air show 2024 iaf airshow 2024 indian air force 2024

இந்த பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்வை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், லட்சக்கணக்கான பொதுமக்கள், சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியக் காண சென்னை கடற்கரையை நோக்கி படையெடுத்த நிலையில், சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை, அடையாறு மேம்பாலம் அருகில் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன.

முன்னதாக, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அண்ணா சிலையில் இருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு. மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளிRA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+