இதயத்தை துடிக்க வைக்க போராடும் 8 வயது சிறுவன்.. நாம் நினைத்தால் காப்பாற்றலாம்! உடனே உதவுவோம்
சென்னை: 8 வயதான நிதீஸ்வரன் எனும் சிறுவன் பிறவி இதய நோயால் உயிருக்கு போராடி வருகிறார். மருத்துவ சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாமல் சிறுவனின் குடும்பம் தவித்து வருகிறது. ஆனால், நம்மை போன்றவர்கள் நினைத்தால் சிறுவனை காப்பாற்ற முடியும்.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் நிதீஸ்வரன், அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் கருவில் இருக்கும்போதே, அவருக்கு இதய பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் நிதீஸ்வரன் பிறந்த பிறகு, மருத்துவ பரிசோதனைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவர் மாற்றப்பட்டார்.

நிதீஸ்வரன் பெற்றோர் மருத்துவமனை வீடு என்று பெரும் போராட்டத்தில் சிக்கியிருந்தனர். என்றாவது ஒருநாள் தனது மகனின் உடல் நிலை சரியாகும் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், பள்ளியில் நடந்த வழக்கமான மருத்துவ பரிசோதனையின்போது சிறுவனின் நோய் பாதிப்பு தீவிரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மியாட் மருத்துவமனை நடத்திய இலவச இதய பரிசோதனையில்.. சிறுவனின் பாதிப்பு துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது சிறுவனுக்கு நுரையீரல் அடைப்பு, பெரிய தவறாக அமைந்த பெருந்தமனிக்கு கீழ் உள்ள வென்ட்ரிக்கிள் சிரை கோளாறு, சுருங்கிய தமனிக்குழாய் மற்றும் வளர்ச்சி குன்றிய கிளை நுரையீரல் தமனிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிக்கலான பிறவி இதய நோயை கண்டறிந்தனர். சிறுவனின் இதய நோயின் சிக்கலான தன்மை மற்றும் தீவிரத்தை கருத்தில் கொண்டு, குறைபாட்டை சரிசெய்து இதயத்திற்கும், நுரையீரல்களுக்கும் இடையிலான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக வலது வென்ட்ரிக்கிள்-நுரையீரல் தமனி (RV-PA) குழாய் மூலம் முழுமையான சீரமைப்பு (ICR) செய்ய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த சிக்கலான ஆபரேஷனுக்கு ரூ.4.8 லட்சம் வரை செலவாகும். ஆனால், தினமும் ரூ.700 மட்டுமே சம்பாதிக்கும் தினக்கூலியான சிறுவனின் தந்தையால் நிச்சயம் இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாது. தந்தைக்கு வேலையும் நிரந்தரம் கிடையாது. தாய் சிறுவனை பராமரித்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார். குடும்பத்திற்கு வேறு வருமானம் கிடையாது. பள்ளி சென்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாட வேண்டிய நிதீஸ்வரன் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படி இருக்கையில் சிறுவனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்முடையதுதான். நம்மால் முடிந்த உதவியை இன்றே செய்வோம். சிறிய உதவியாக இருந்தாலும் அது சிறுவனின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications
