10 வயது மகனின் உயிரை காக்க.. தனியாக போராடும் விவசாயி தாய்.. அவசர சிகிச்சைக்கு.. உடனே உதவுங்கள்!
சென்னை: இதய குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் 10 வயது சிறுவனின் அவசர சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
இதயக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சிறுவன் தர்ஷனுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கொடுங்கள். அவரது சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது துடிப்பான சிறுவன் தர்ஷன். வாழ்க்கை தன் முன் வைத்த சவால்களுக்கு மத்தியிலும்.. தனக்கு நடக்க போகும் அவலம் தெரியாமலும் சந்தோசமாக வாழ்ந்து வந்தான். உள்ளூர் அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் விடாமுயற்சியுள்ள மாணவன் தர்ஷன்.
கடுமையான சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றால் சிறிய வயதில் இருந்தே தர்ஷன் கடுமையாக அவதிப்பட்டு வந்தான். எந்த விதமான சிகிச்சை கொடுத்தும் அது தர்ஷனுக்கு பலன் அளிக்கவே இல்லை. இதையடுத்து சமீபத்தில், MIOT மருத்துவமனைகள் ஏற்பாடு செய்த இலவச இருதய பரிசோதனை முகாமின் போது, தர்ஷனுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது தர்ஷனின் நிலை யாரும் கற்பனை செய்ததை விட மிகவும் தீவிரமானது என்று தெரியவந்தது. அவருக்கு ஒரு சிக்கலான பிறவி இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது: அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Large Posterosuperior ASD with PAPVC of RUPV to RA எனப்படும் உயிருக்கு ஆபத்தான குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

MIOT மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை முறையை பரிந்துரைத்துள்ளனர்: ASD மூடல் மற்றும் நுரையீரல் நரம்புகளை LA க்கு மாற்றுதல் உள்ளிட்ட சிகிச்சைகளை பரிந்துரை செய்துள்ளனர். அதாவது ASD closure and rerouting of pulmonary veins to LA. ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுள்ளனர். இந்த முக்கியமான அறுவை சிகிச்சையின் மதிப்பிடப்பட்ட செலவு ₹2,80,000 ஆகும்.
மொத்தமாக அறுவை சிகிச்சை, சிகிச்சைக்கு முன் பின் மருந்துகள், தயாரிப்பு, மருத்துவ தேவை ஆகிய மருத்துவ தேவைக்காக இந்த தொகை தேவைப்படுகிறது. அந்த குழந்தைக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். குழந்தை உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் குழந்தையின் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.












Click it and Unblock the Notifications