பச்சிளம் குழந்தை இதயத்தில் கோளாறு.. அவசரமாக பணம் தேவை.. உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: இந்த குழந்தை பெயர் ஹர்ஷன். பிறந்து 25 நாட்களே ஆகி உள்ளது. ஆனால் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது.
இதையடுத்து மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளில், குழந்தையின், இதயத்தில், கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறு பிஞ்சு குழந்தைக்கு இப்படி ஒரு மோசமான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, அவர்களின் குடும்பமே உடைந்துபோயுள்ளது. அந்த நோயின் மருத்துவ பெயர், LARGE SUBPULMONIC VENTRICULAR SEPTAL DEFECT.
குழந்தையின் தந்தை, சுமை தூக்கும், தினக்கூலி வேலை பார்த்து வருகிறார். ஆனால் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அப்போதுதான் காப்பாற்ற முடியும், என்று டாக்டர்கள் அறிவுறுத்தி விட்டனர்.
கோவை மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் அவ்வளவு செலவிட இந்த ஏழை குடும்பத்தால் முடியவில்லை. எனவே உங்கள் அனைவரின் ஆதரவையும் கேட்டு நிற்கிறது இந்த குடும்பம்.
உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சிறுதுளி பெருவெள்ளம் ஆகட்டும். அதன் மூலம், அந்த குழந்தை மருத்துவ சிகிச்சை பெற்று நலம் பெறட்டும்.















Click it and Unblock the Notifications