நூடுல்ஸ் சாப்பிட போறீங்களா?.. ஒரு நிமிஷம் இந்த வீடியோவை பாருங்க.. இப்படியா தயாராகிறது?
சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் எப்படி தயார் செய்யப்படுகிறது என்பது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
5 நிமிடங்களில் உணவு வேண்டுமா? இருக்கவே இருக்கிறது நூடுல்ஸ். கடைகளில் விற்கப்படும் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கி அதனுடன் காய்கறிகள், பட்டாணி ஆகியவற்றை போட்டு தயார் செய்வது எளிதான வேலை.
இதனால் இதை ஒரு பேச்சுலர்ஸ் ரெசிபி என்றே சொல்லலாம். நிறைய நிறுவனங்கள் இந்த நூடுல்ஸை விதவிதமாக தயார் செய்து வருகிறார்கள். குடும்பத்தை பிரிந்து தனியே இருக்கும் ஆண்களும் பெண்களும் அவசர தேவைக்கு எப்படி உப்புமா கைக் கொடுக்கிறதோ அது போல்தான் பலருக்கு இந்த நூடுல்ஸ்!

பட்டாணி, காய்கறிகள்
தினசரி இந்த பாக்கெட்டை வாங்கி இதனுடன் பட்டாணி, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை போட்டு வதக்கிவிடுகிறார்கள். அதன் பின்னர் தண்ணீரை ஊற்றி அது கொதித்து காய்கள் வெந்தவுடன் நூடுல்ஸை போட்டு தண்ணீர் வற்றியவுடன் இறக்கிவிட்டு அதில் பெப்பரை தூவி சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

சிக்கன் நூடுல்ஸ்
இது வெஜிடேரியன் மட்டுமில்லாமல், சிக்கன் நூடுல்ஸாகவும் வருகிறது. எனவே அவரவர் உணவு பழக்கவழக்கத்திற்கேற்ப நாம் இந்த நூடுல்ஸை தேர்வு செய்து சமைத்து வாங்கி சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்கிறார்கள். இது ஜங்க் புட் லிஸ்ட்டில் இருந்தாலும் இதில் மைதாவால் செய்யப்பட்டதாக இருந்தாலும் பலர் விரும்பி உண்கிறார்கள்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள். ஆனாலும் செய்ய எளிதாகவும் சீக்கிரமே குழந்தைகள் சாப்பிடுவதாலும் பெரும்பாலான தாய்மார்களின் சாய்ஸ் நூடுல்ஸாக இருக்கிறது. இந்த நூடுல்ஸ் எப்படி தயாராகிறது என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். இது குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ
அந்த வீடியோவை மட்டும் நீங்கள் பார்த்தால் நிச்சயம் நூடுல்ஸ் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டீர்கள். அந்த வீடியோவில் சரியான உபகரணங்கள் மற்றும் சுகாதாரம் இல்லாமல் தொழிலாளர்கள் கவனக்குறைவாக எப்படி நூடுல்ஸ் தயாரிக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

ஆச்சரியம்
கை உறை இல்லாமல் மாவை வெறும் கைகளால் கையாள்கிறார்கள். அழுக்கு பாத்திரங்களில் வைத்து அழுக்குத் தரையில் வீசுகிறார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது நூடுல்ஸ் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications