எப்படியிருந்த புழல் ஏரி இப்படியாகிடுச்சே.. பகீர் கொடுக்கும் சாட்டிலைட் புகைப்படம்
Recommended Video
சென்னை: எப்படி இருந்த புழல் ஏரி இப்படி ஆகிவிட்டது என்பது போல் ஒரு செயற்கை கோள் படம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் போதிய பருவமழை பெய்யாததால் கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது கோடையில் வீசி வரும் கடும் அனலால் நீர் நிலைகள் அனைத்து வற்றிவிட்டன.
அதுபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளும் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.

பொதுமக்கள்
இரவு, பகல் பாராமல் பொதுமக்கள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் லாரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த லாரிகள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் சென்றுவிடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

வேதனை
அப்படியே லாரி நீர் வந்தாலும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது என்றும் அவ்வாறு வரும்போது இரு குடங்கள் மட்டுமே நீர் கிடைக்கிறது என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள்
சென்னையில் குடிநீர் பஞ்சத்தால் ஹோட்டல்கள் மூடுவது, மேன்ஷன்கள் மூடுவது என நடக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து பணி நிமித்தமாகவோ கல்விக்காகவோ தங்கியிருக்கும் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.

வறட்சி
இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் புழல் ஏரி குறித்து ஒரு செயற்கைகோள் படம் வெளியாகியுள்ளது. அதில் வலது பக்கம் இருப்பது புழல் ஏரி வறண்டு போவதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி எடுக்கப்பட்டது. அதே போல் இடது புறத்தில் உள்ள படம் சென்னையில் வறட்சி நிலவிய பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி எடுக்கப்பட்டது.

புகைப்படம்
இதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முதலில் வறண்டுவிட்டாலும் புழல் ஏரியே சிறிது காலம் வரை கைகொடுத்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது மனவேதனை அடைகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications