பொன்மகன் சேமிப்பு திட்டம் Vs பிபிஎஃப்! ஆண் குழந்தைகளுக்கு எந்த திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்தது?
சென்னை: 10 லட்சத்தை டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியை பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் மூலமாக இரு மகன்களுக்கு செய்யலாமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: 10 லட்சம் அதை டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியை பொன்மகன் சேமிப்பு திட்டதின் மூலமாக இரண்டு மகனுக்கு வயது 8, மற்றும் 5,சேர்க்க திட்டமிட்டிருந்தால், இந்த 10 லட்சத்தை எதில் டெபாசிட் செய்வது? வட்டி எவ்வளவு வரும்?

பொன்மகன் சேமிப்புத் திட்டம் தமிழக அரசால் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் குறைந்த வருவாயுள்ள குடும்பங்களிலுள்ள ஆண் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்வதற்காக தொடங்கப்பட்டது. இதில் முதலீடு செய்வதற்கு ஆண்டு வருமானம் 8 இலட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
பொன்மகன் சேமிப்புத் திட்டம் உங்களுக்கு ஒத்து வந்தால், ஒரு மகனின் பெயரில் பொன் மகன் சேமிப்புத் திட்டத்திலும், மற்றொரு மகன் பெயரில் பொது சேமநல நிதியில்(Public Provident Fund) முதலீடு செய்யலாம். பொன்மகன் சேமிப்புத் திட்டம் உங்களுக்கு சரிவராது எனில், நீங்கள் உங்களது இரு மகன்களின் பெயரில் தனித்தனியாக பொது சேமநல நிதி கணக்கைத்(Public Provident Fund) தொடங்கலாம்.
பொது சேமநல நிதியில் கிடைக்கும் வட்டி விகிதம் 7.1%. இத்தகைய அதிக வட்டி விகிதம் வங்கி வைப்பு நிதிகளில் கிடைக்காது. பொது சேமநல நிதியில் முதலீடு செய்யும் பணத்திற்கு 80C படி 1.5 இலட்சம் வரை வரி கிடையாது. வருடா வருடம் வளரும் பணத்திற்கு வரி கிடையாது. முதலீட்டினை எடுக்கும் காலத்தில் வளர்ந்த பணத்திற்கு வரி கிடையாது. அதாவது, முதலீட்டுத் தொகை , வளர்ந்த தொகை, எடுக்கும் தொகை என்ற மூன்றுக்கும் வரி கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Exempt , Exempt, Exempt என்று குறிப்பிடுவர். எனவே, வைப்பு நிதிகளில் பணத்தைப் போட்டு, வட்டியை பொது சேமநல நிதியில் போடுவதை விட, நேரடியாக பொது சேமநல நிதியில் போடுவது நல்லது. ஆனால், அதிகபட்சமாக வருடம் 1.5 இலட்சம் தான் முதலீடு செய்ய முடியும். எனவே, வருடா வருடம் முதலீடு செய்து, பணத்தை முழுவதுமாக பொது சேமநல நிதிக்கு கொண்டு செல்லுங்கள்.
நீங்கள் பின்வருபவற்றைச் செய்யுங்கள்
1. பொதுசேமநல நிதியில் இருவருக்கும் தனித்தனியாக 1.5 இலட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். வருடம் 3 இலட்ச ரூபாய் இதில் அதிகபட்சமாக முதலீடு செய்யலாம்.
2. மீதமுள்ள பணத்தை வைப்பு நிதியில் போட்டு, அடுத்த ஆண்டு இதனைத் தொடரலாம்.
3. மூன்று ஆண்டுகளில், வருடம் 3 இலட்சம் வீதம் பணம் முதலீடு செய்தபிறகு, நான்காவது ஆண்டில் வைப்பு நிதியில் மீதமுள்ள பணத்தை இரண்டாகப் பிரித்து, பொது சேமநல நிதியில் முதலீடு செய்யுங்கள். பொது சேமநல நிதி அருமையான கூட்டு வட்டித் திட்டம். பணத்தை நன்கு வளர்க்க உதவும். நான்காவது ஆண்டிற்கு பிறகும் கூட, முடிந்த அளவிற்கு முதலீடு செய்வது நல்லது. முடியாவிட்டால், குறைந்தபட்ச தொகையான ரூபாய். 500 ஐ ஆண்டாண்டு முதலீடு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications