கோலாகல கருணாநிதி சிலைத் திறப்பு விழா: ரஜினிகாந்த் உட்பட.. பங்கேற்ற விஐபிகள் யார் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

Recommended Video

    சென்னை: கம்பீரமாய் நிற்கும் கலைஞர் சிலை... குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைப்பு!

    சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    ரூ 1.17 கோடி மதிப்பில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

     Here are the list of chief guests including Rajinikanth, attended Karunanidhis statue unveil

    சிலை திறப்பு விழா குறித்த நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முதல்வர் குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் வருகை தந்தனர். அது போல் ரஜினிகாந்த், வைரமுத்து, நக்கீரன் கோபால், பத்திரிகை ஆசிரியர் கோவி லெனின், சென்னை மேயர் பிரியா உள்பட 20 மேயர்களும் வருகை தந்துள்ளனர்.

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி வேல்முருகன், வழக்கறிஞர் கண்ணதாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, நடிகர் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+