திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி? பட்டியல் இதோ!
சென்னை: திமுக கூட்டணியில் தொகுதி இறுதியான வரை எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை பார்ப்போம்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன.

திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் கட்சி வாரியாக தொகுதிகள்
காங்கிரஸ்- 10
விசிக- 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2
மதிமுக-1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1
மக்கள் நீதி மய்யம்- 1 மாநிலங்களவை சீட்
இந்த கட்சிகளில் விசிக, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியில் திமுக சின்னத்தில் அதாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - ராமநாதபுரம்
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்
- கம்யூனிஸ்ட் கட்சி- நாகை, திருப்பூர்
- மார்க்சிஸ்ட் கட்சி - மதுரை, திண்டுக்கல்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி- சிதம்பரம், விழுப்புரம்
ஆகியவை ஆகும்.
இதுவரை திமுக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் தொகுதிகள் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications