அப்பாடா.. மேரி பிஸ்கெட்டுல 17 ஹோல்ஸ் இருக்கு.. இன்னும் 18 நாட்களில் மத்ததையும் கண்டுபிடிக்கணும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேரி பிஸ்கெட்டுல 17 ஹோல்ஸ் இருக்கிறது என ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

    'பெருமாள்' கொரோனா அவதாரம் எடுத்துட்டாராம்.. கலிகாலம் ஆரம்பிச்சுடுச்சாம்.. சொல்கிறார் டாக்டர் கமலா!

    கொரோனா பீதியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் அத்தியாவசிய பணிகளுக்குச் செல்வோர் தவிர்த்து மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டது.

    இதனால் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து தங்கள் பொழுதை கழிக்கின்றனர். சிலர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர். இன்னும் சிலர் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது, திரைப்படங்களை பார்ப்பது உள்ளிட்டவைகளில் ஈடுபடுகின்றனர்.

    முக்கிய பணி

    முக்கிய பணி

    இதெல்லாம் நாம் ஆபிஸுக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்து செய்யும் வேலைகள். இதையே முழு நேரமும் செய்வதென்றால் என்ன செய்வது என புரியாமல் சிலர் வேண்டாத வேலைகளில் ஈடுபடுகின்றனர். இப்படியே போனால் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவதற்குள் இவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளாகிவிடுவர். ஒருவர் மிக்ஸரை பிரித்து வைக்கும் முக்கிய பணியில் ஈடுபடுவது போல் ஒரு மீம் உலா வருகிறது.

    மீன் தொட்டி

    மீன் தொட்டி

    அது போல் இன்னொரு மீமில் மேரி பிஸ்கெட்டுல 17 ஹோல்ஸ் இருக்கிறது என்ற மாபெரும் கண்டுபிடிப்பை உணர்த்துவது போல் உள்ளது. மேலும் மில்க் பிக்கீஸில் 45 கட்டங்கள் இருக்கின்றன. இன்னும் 18 நாட்களில் எத்தனை கண்டுபிடிக்கணுமோ! இன்னொரு மீமில் " அண்ணே அங்க பாருங்கள் 4 நாட்கள் கூட ஆகலை, அதுக்குள்ள வீட்டுக்குள்ளே இருக்கும் ஃபிஸ் டேங்கில் மீன் பிடிக்கிறான்" என கூறுகிறது.

    பாட்டு

    பாட்டு

    இன்னொரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு வயதான தம்பதி இடம்பெற்றுள்ளனர். கரகாட்டக்காரன் படத்தில் வரும் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். இதிலும் ஒரு கண்டுபிடிப்பு இருக்கிறது. ஒரு சிறிய பேரலை மேளம் போல் சித்தரித்து புடவையால் கழுத்தில் கட்டிக் கொண்டு ஆடுகிறார் முதியவர். அந்த மூதாட்டியோ தலையில் கரகத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் குடத்தை வைத்து ஆடுகிறார்.

    வானத்தை போல

    வானத்தை போல

    இன்னொரு மீம் செம காமெடி, இந்த பாக்கெட்டுல 294 மூங் டால் இருக்கு சந்தேகம் இருந்தால் நீங்களே எண்ணி பாருங்க என வானத்தை போல விஜயகாந்த் டோனில் இந்த மீம் இருக்கிறது. இந்த லாக்டவுன் நாட்கள் இப்படித்தான் இருக்கும் போலயே!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+