தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற எம்பிக்கள் யார் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் யார் தெரியுமா?
நாடு முழுவதும் 18ஆவது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வென்றது.
அதில் பாஜக மட்டும் தனித்து 239 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான "இந்தியா" கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வென்றது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.
அது போல் அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. தமிழகம், புதுவை என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் யார் தெரியுமா?
மாணிக்கம் தாகூர்- விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனை 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஆ.மணி- தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட ஆ.மணி (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட சவுமியா அன்புமணியை 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மாதேஸ்வரன்- நாமக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மாதேஸ்வரன் (கொங்கு மக்கள் தேசிய கட்சி) தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்மணியை (அதிமுக) 28,187 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மலையரசன்- கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட மலையரசன் (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட குமரகுருவை (அதிமுக) 53,784 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

டி.எம்.செல்வகணபதி- சேலம் தொகுதியில் போட்டியிட்ட டி.எம். செல்வகணபதி (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட விக்னேஷை (அதிமுக) 67,371 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications