உதயநிதி, அன்பில் மகேஷ் உள்பட 5 புதியவர்கள், 3 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம்?.. உத்தேச லிஸ்ட்
சென்னை: திமுக அமைச்சரவையில் முதல்வருடன் சேர்த்து மொத்த 30 அமைச்சர்கள், 3 பெண் அமைச்சர்கள், 5 புதியவர்களுக்கு வாய்ப்பு என உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2006 இல் மைனாரிட்டி திமுக அரசு என ஜெயலலிதாவால் அழைக்கப்பட்ட நிலையில் தற்போது தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
இந்த நிலையில் முதல்வராக ஸ்டாலின் வரும் 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையாக பதவியேற்கிறார். திமுக வென்றதும் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது.

அமைச்சரவை
தற்போது திமுக அமைச்சரவை குறித்து உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. திமுகவுக்கு நெருக்கமானவர்கள் வெளியிட்ட இந்த பட்டியலின் உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கவில்லை. எனினும் இதில் யாருக்கு எந்த துறை என்பதை பார்ப்போம்.

துரைமுருகன்
சபாநாயகர் பதவி துரைமுருகனும் துணை சபாநாயகர் பதவி சக்கரபாணிக்கும் வழங்கப்படுகிறது. இடைக்கால சபாநாயகர் யார் என தெரியவில்லை. முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் வசம் பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ் நிர்வாகம், ஐஎஃப்எஸ், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல் துறை , உள்ளாட்சி, லஞ்ச ஒழிப்புத் துறை, துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட துறைகள் இருக்கும்.

மின்சாரத் துறை
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித் துறை வழங்கப்படுமாம். இத்துடன் கூடுதலாக திட்ட கமிஷன், கலால் துறை, வருவாய் துறை உள்ளிட்டவை இருக்கும். அது போல் ஆத்தூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் திலகபாமாவை தவிர அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்தவர். இவருக்கு மின்சாரத் துறை ஒதுக்கப்படுமாம்.

பேரிடர்
அது போல் கே. என்.நேருவுக்கு பொதுப் பணித் துறை, வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி வளர்ச்சி, குடிசை வாரியம் உள்ளிட்ட துறை வழங்கப்படுகிறதாம். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு உயர் கல்வித் துறை, தங்கம் தென்னரசுக்கு பள்ளிக் கல்வித் துறை, எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திற்கு வேளாண் துறை, எ.வ.வேலுவுக்கு உணவு மற்றும் வழங்கல் துறை, சாமிநாதனுக்கு நெடுஞ்சாலை துறை மற்றும் துறைமுகங்கள், மா சுப்பிரமணியனுக்கு சட்டத் துறை, பேரிடர் மேலாண்மை வழங்கப்படுமாம்.

தொழில் துறை
அது போல் எஸ் முத்துசாமிக்கு தொழிற்துறையும் சுரங்கத் துறையும், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு பால்வளத் துறை, ராஜேந்திரனுக்கு கூட்டுறவுத் துறை, கு பிச்சாண்டிக்கு தமிழக ஆட்சி மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை ஆகியவை வழங்கப்படும்.

5 புதியவர்கள்
முதல்முறையாக சில இளைஞர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் டாக்டர் எழிலனுக்கு சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலம், உதயநிதி ஸ்டாலினுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையும் டிஆர்பி ராஜாவுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் அன்பில் மகேஷுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் வெற்றி அன்பழகனுக்கு பத்திரப்பதிவு, வர்த்தக வரி துறையும் வழங்கப்பட வாய்ப்பிருக்கிறதாம்.

அனிதா ராதாகிருஷ்ணன்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கைத்தறித் துறை, கீதா ஜீவனுக்கு சுற்றுச்சூழல் துறை, தமிழரசிக்கு ஆதி திராவிடர் நலத் துறை, சேகர் பாபுவுக்கு மீன்வளத் துறை, ரகுபதிக்கு ஊரக தொழில் துறை, குடிசை மற்று்ம சிறுகுறு தொழில் துறை, காதர் பாட்ஷா முத்து ராமலிங்கத்திற்கு சுற்றுலாத் துறையும் மனோ தங்கராஜுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறையும் ராமசந்திரனுக்கு கதர் நலத் துறையும் அப்துல் வகாப்புக்கு தொழிலாளர் நலத் துறையும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இந்து சமய அறநிலையத் துறையும் வரலட்சுமிக்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் நலத் துறை, வெளிநாடு வாழ் இந்தியர் துறையும் வழங்கப்படுமாம்.

3 பெண்கள்
இந்த உத்தேச பட்டியலின் படி முதல்வருடன் சேர்த்து 30 அமைச்சர்கள் உள்ளனர். இந்த 30-ல் 3 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 5 இளைஞர்களுக்கு முதல்முறையாக அமைச்சர் பதவி வழங்கப்படுகிறதாம். அது போல் முன்னாள் அமைச்சர்களுக்கும் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications